NewsBlog

Monday, August 21, 2017

மனிதநேயம் வெளிப்பட்ட அந்த தருணத்தில்..


பகவான் தாஸ் மஹாராஜ். விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சன்யாசி. ஹரித்துவார் சென்று புனித கங்கையில் நீராட 6 பேர் கொண்ட குழுவினருடன் பயணம் மேற்கொண்டவர். விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமலிருந்தார். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பெயர்களில் என்ன இருக்கிறது? பண்புகள் செயல்களில் வெளிப்பட்டாலே போதுமானது. இறைநம்பிக்கையை பூர்த்தி செய்ய வல்லது.

உத்திரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் சனிக்கிழமை மாலை (19.08.2017) தடம் புரண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரி-ஹரித்துவார் கலிங்கா உத்கல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் புரி நகரிலிருந்து உத்தராகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இடையே உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கதாவ்லி என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி அதன் 14 பெட்டிகள் தடம் புரண்டன. மிகவும் சோகமான செய்தி இது.

பகவான் தாஸ் மஹாராஜ். விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சன்யாசி. ஹரித்துவார் சென்று புனித கங்கையில் நீராட 6 பேர் கொண்ட குழுவினருடன் பயணம் மேற்கொண்டவர். விபத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமலிருந்தார்.

"ரயில் தடம் புரண்ட அதிர்ச்சியில் நான் இரண்டு அடிகள் முன்புறம் தூக்கி எறியப்பட்டேன். என் தலை எதிரிலிருந்த இருக்கையில் முட்டியது. கடுமையான வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த என்னைச் சுற்றிலும் மரண ஓலங்கள் கேட்கலாயின. அந்த நேரத்தில் அவர்கள் இல்லாவிட்டால் நாங்கள் இந்நேரம் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்போம். ஆம்... எங்கிருந்தோ பாய்ந்த வந்த முஸ்லிம்கள் பெட்டிக்குள் சிக்கியிருந்த எங்களை மீட்டார்கள். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் காப்பாற்றியிருக்காவிட்டால் இந்நேரம் நாங்களும் பலியாகியிருப்போம்" - என்கிறார் சன்னியாசி பகவான் தாஸ் மஹாராஜ்.

"பெட்டிக்குள்ளிலிருந்த எங்கள் அனைவரையும் மீட்ட முஸ்லிம்கள் குடிநீர் கொடுத்தார்கள். ஓய்வெடுக்க படுக்கை வசதிகளையும் செய்தார்கள். கூடவே தனியார் மருத்துவரை ஏற்பாடு செய்து எங்களுக்கு விரைந்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார்கள்! இந்த உதவியை உயிருள்ளவரை எங்களால் மறக்கவே முடியாது!"- என்கிறார் நன்றி பெருக்கெடுக்க பகவான் தாஸ் மஹாராஜ்.

"இந்த விபத்தில் இறைவனின் கருணையை நேரில் கண்டோம். அரசியல்வாதிகள் எங்களை இந்து-முஸ்லிம் என்று பிரித்திருந்தாலும் நாங்கள் எப்போதும் ஒன்றுதான் என்று நிரூபணமான தருணமிது!" - என்கிறார் மற்றொரு சன்னியாசியான மோர்னி தாஸ்.

நான் ஆரம்பத்தில் சொன்ன வாக்கியங்களை மீண்டும் நினைவுகூருங்கள்:

'பெயர்களில் என்ன இருக்கிறது? அந்தப் பண்புகள் செயல்களில் வெளிப்பட்டாலே போதுமானது. இறைநம்பிக்கையை பூர்த்தி செய்ய வல்லது'.

மனித நேயம் வெளிப்படும் தருணத்தில் இதயங்கள் பிண்ணிப் பிணைந்துவிடுகின்றன என்பது உண்மைதான்!

Share:

1 comment:

  1. ஆனால் முஸ்லிம்கள் இந்துக்கள் செய்யும் நன்மைகளை என்றும் பகிரங்கமாக கூறுவதில்லை

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive