NewsBlog

Saturday, October 24, 2015

சிறப்புக் கட்டுரை: மறக்கடிக்கப்பட்ட மகாகவி!


'அம்மா நாள்! ஆயா நாள்!!' - என்று ஆளாளுக்கு சிறப்பு நாட்களை நிர்ணயித்துக் கொண்டு உலகம் முழுக்க வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டிருக்க.. நவ.09 வரவிருக்கிறது.

ஆம்! அன்றுதான் ஒரு மாபெரும் கவிஞரின் ... பழுத்த தேசபக்தரின் பிறந்த நாள். ஆண்டுதோறும் இந்த கவிஞர் பெருந்தகையின் பிறந்தநாள் மறக்கடிக்கப்படுவதற்கு காரணம்.. அவர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை. அவர்தான் மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்.

1938 இல், லாகூரில் மகாகவி இக்பால் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஜவஹர்லால் நேருவும் கலந்து கொண்டார். அவர் மேடையிலிருந்த மகாகவி இக்பாலை நோக்கி இப்படி சொன்னார்: "ஜின்னாஹ்  ஒரு அரசியல்வாதி! நீங்களோ ஒரு தேசபக்தர்!"

பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணகர்த்தா மகாகவி இக்பால், என்று சொல்பவர்களுக்கு இது நெத்தியடியாகும். இருந்தும் அவர் இன்னும் தொடர்ந்து பழிக்கப்படுகிறார்.

இந்திய துணைக்கண்டத்தின் பன்முகப் பண்பாட்டை மிகவும் விரும்பியவர் மகாகவி. இந்த விருப்பத்தின் பிறிதொரு வடிவம்தான் இன்றளவும் போற்றப்படும், "சாரே ஜஹான்சே அச்சாஹ்  ஹிந்துஸ்தான்  ஹமாரா..  ஹமாரா..!" - என்ற ஒவ்வொரு இந்தியனையும் சிலிர்க்க வைக்கும் தேசியப்பாடல்.

தேசியக் கீதமாக நிலைப்பெற்றிருக்க வேண்டிய பொதுமையும், இந்திய மண்ணின் பண்பையும் விளக்கும் இப்பாடல் ஓரங்கட்டப்பட்டது அதை எழுதியவர் ஒரு முஸ்லிம்  என்ற காரணம் அன்றி வேறில்லை. அந்த இடத்தைப் பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பாடல் தேசிய கீதமாக்கப்பட்டது.

ராமரை வம்பு சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ராமர் "இமாமே  ஹிந்த்!" - என்று பறைச்சாற்றியவர் மகாகவி அதாவது "ராமர் இந்திய துணைக்கண்டத்தின் தலைவர்!" - என்று வர்ணித்தார் அல்லாமா இக்பால்.

இப்படிப்பட்ட மகாகவிஞரை நாடும் மறந்தது. நாமும் மறந்தோம். 

இந்நிலையில் டோங்ரியிலிருந்து வெளிவரும், 'திங்-டாங்க்' என்னும் பத்திரிகை ஒன்று சென்ற ஆண்டு, இக்பால் வாரம் என்ற பெயரில் விழா எடுத்து சிறப்பித்தது.

மறைந்த பேரறிஞர் ஜக்கரிய்யா நேரு மையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பிஜேபியின் முன்னாள் பொதுசெயலாளர் பிரமோத் மகாஜன்னும் மேடையேறி இருந்தார்.

மகாஜன் தனது பேச்சினூடே, "மிகச்சிறந்த இந்திய முஸ்லிம்களில் இக்பால் போன்ற ஒருவர் - சாரே ஜ ஹான்சே அச்சா என்று பாடியவர் பின்னாளில் இந்தியாவைத் துண்டாடினார்!" - என்று சாடினார்.

இது அறிஞர் ஜக்கரிய்யாவைப் பாதிக்க அவர் எழுத்தில் உருவானது 'இக்பால் - தி போயட் அண்ட் தி பொலட்டீஷியன்'. வைகிங் புத்தக நிறுவனம் இதை 1993 வெளியிட்டுள்ளது.


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive