NewsBlog

Tuesday, October 13, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 7: ஓர் இறை..! ஓர் நிறை..!!

 
அமெரிக்க நீக்ரோ இன மக்களின் தலைவரான மால்கம் எக்ஸ், (மாலிக் யேல்-ஷஹபாஜ்) தனது ஹஜ் அனுபவங்களைத் தனது உதவியாளர் அலெக்ஸ் ஹாலியிடம் பகிர்ந்து கொள்ளும்போது சொல்கிறார்:

"இறைத்தூதர் இப்ராஹீம் நபி மற்றும் முஹம்மது நபிகளாரின் தாயகமான, புனிதம் மிக்க இந்த மக்காவின் மண்ணில் பல்வேறு இன,நிறங்கள் கொண்டிருப்போர் கலந்து உறவாடுவதையும், அவர்களிடையே காணப்படும் உணர்வு பூர்வமான உபசரிப்பையும், சகோதரத்துவ அன்பையும் நான் இதுவரையும் கண்டதில்லை. என்னைச் சுற்றியும் நிகழ்ந்த இந்த நிகழ்வுகளால் நான் வாயடைத்து நின்றுவிட்டேன்.

உலகின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர் யாத்ரீகர்கள். அவர்கள் பல்வேறு நிறத்தினர். கரு நீலக் கண்களும் பொன்னிற முடியையும் கொண்ட வெள்ளையர்கள். கருநிறத்து ஆப்பிரிக்கர்கள்.

ஆனால், நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சங்கமித்திருந்தோம் எந்தவித பேதமும் இல்லாமல். உணர்வுபூர்வமான சகோதரர்களாக நாங்கள் கலந்த பழகினோம்.

இது அமெரிக்காவில் வெள்ளையருக்கும், வெள்ளையர் அல்லாதவருக்கும் இடையே இதுவரை நான் காணாததாகும்.

அமெரிக்கா இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் தேவையிருக்கிறது. ஏனென்றால் இநத ஒரே மார்க்கத்தால்தான் தீண்டாமை ஒழித்திட முடியும்.

எங்களுடனிருந்த சக முஸ்லிம்களான கருநீலக் கண்களைக் கொண்டவர்கள்... வெள்ளை வெளேர் தோல் கொண்டவர்கள் கடந்த பதினொரு நாட்களும் இந்த முஸ்லிம் உலகில்தான் ஒன்றாக வாழ்ந்தோம்.

நாங்கள் ஒரே தட்டில் உணவு உண்டோம். ஒரே படுக்கையில் படுத்திருந்தோம். ஒரே இறைவனைத் தொழுது வணங்கினோம். இதில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த முஸ்லிமிடமும், நைஜீரியா, சூடான், கானா போன்ற ஆப்பிரிக்காவின் கருப்பு இனத்தைச் சேர்ந்த முஸ்லிமிடமும் நான் எந்தவிதமான பேதத்தையும் காணவில்லை!"

கேட்டீர்களா.. மால்கம் எக்ஸின் அனுபவத்தை?

உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனுக்கும் அதிகம். உலகளவில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம்.

இஸ்லாம் இன்று வெகுவேகமாக வளர்ந்துவரும் மார்க்கம்.

பிலிப்பைன்ஸிலிருந்து நைஜீரியாவரை அவர்கள் இஸ்லாத்தால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெறும் 18 விழுக்காடு பேர் மட்டுமே அரபியர்!

இந்தோனேசியாதான் உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு. 30 விழுக்காடு முஸ்லிம்கள் இந்திய உபகண்டத்திலும், 20 விழுக்காடு ஆப்பிரிக்காவிலும், 17 விழுக்காடு பேர் தென் கிழக்கு ஆசியாவிலும், 18 விழுக்காடு அரபு நாட்டிலும், 10 விழுக்காடு முஸ்லிம்கள் சோவியத் யூனியன் மற்றும் சீனாவிலும் வாழ்கிறார்கள்.

மத்திய கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 10 விழுக்காடு அரபியர் அல்லாத முஸ்லிம்கள் துருக்கி, ஈரான், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்.

இது தவிர லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல பகுதிகளில் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகள், இந்தியா மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலும் அதிகளவில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் 80 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

---- இறைவன் நாடினால் அருட்கொடைகள் தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:
அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive