இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவ கொள்கை முஸ்லிம்களின் தனித்தன்மை!
இந்த ஏக இறைக்கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை அத்தனை அடிமைத்தளைகளிலிருந்தும் விடுவித்துக் கொண்டார்கள். இறைவனின் சட்டங்களை வாழ்வின் ஜீவனாகக் கொண்டார்கள்.
முஸ்லிம்கள் கிரேக்க நாகரீகத்தோடு தொடர்ப்பு கொண்டபோது, கிரேக்க இலக்கியங்களை மொழி பெயர்த்தார்கள். அந்த நிலையிலும், இறைவனுக்கு இணை கற்பித்து புனையப்பட்டிருக்கும் பகுதிகளை அவர்கள் மொழியாக்கம் செய்யவில்லை.
ஓவியக் கலையில் ஒப்பற்ற திறமையைப் பெற்றிருந்தார்கள். இருந்தாலும், தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு விரோதமாக ஓவியங்களைத் தீட்டியதில்லை.
சிற்பக் கலையில் சிறந்து விளங்கியும் சிலைகளைச் சிற்பங்களாக வடிக்கவில்லை. சிலைகள் எந்த நிலையிலும் இறைத்தன்மை பெற்றிடக் கூடாது என்ற காரணம் தான் அது.
'அந்தூலூசியா' என்ற பண்டைய நாளில் அழைக்கப்பட்ட ஸ்பெயினில் 800 ஆண்டுகாலம் இஸ்லாம் கோலோச்சியது.
அக்காலக் கட்டத்தில் ஆடை-அணிகலன்கள், மட்பாண்டங்கள், உலோகங்கள் இவற்றில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள் எல்லாம் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருந்தன.
கலைநயததிலும், வேலைபாடுகளிலும் வெவ்வேறாக இருந்தாலும் எகிப்தாகட்டும், சிரியாவாகட்டும் அல்லது ஈரானாகட்டும் ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள், பாத்திரங்கள் இவற்றை இஸ்லாமிய கொள்கைக்கு உட்படுத்தியே அவர்கள் பார்த்தார்கள்.
மற்றைய நாகரீகங்களுக்கும், இஸ்லாமிய நாகரீகத்துக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சமாகும்.
உலகளாவிய மார்க்கமாக நிற்பது இஸ்லாமிய நாகரீகத்தின் தனித்தன்மைகளில் மற்றொன்று.
ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, நாட்டுக்கோ, மக்களுக்கோ மட்டும் தன்னை சொந்தமாக்கிக் கொள்ளவில்லை இஸ்லாம். உலகமக்கள் அனைவருக்குமான வாழ்க்கை நெறி அது. மனித இயல்புகளையொட்டிய வாழ்க்கைத் திட்டம் அது.
மனிதனைப் பற்றிப் பேசும் மார்க்கம். மனிதனை பண்பு நலன்களின் உயரிய சிகரங்களில் சேர்ப்பதற்கான வழிமுறையே இஸ்லாம்.
இஸ்லாத்தின் இந்த உலகளாவிய மனப்பான்மைதான் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவ காரணமானது.
அறிவியலாளர், சிந்தனையாளர், அரசியல் அறிஞர், படித்தவர், பாமரர் என்று மனித குழுமங்களின் அத்தனை இதயங்களையும் தொட்டு ஈர்க்கவல்ல ஆற்றல் கொண்ட மார்க்கம் இஸ்லாம்.
"மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் - தந்தையின் வழித்தோன்றல்கள்!"
"இறையச்சமுடையோரே மனிதர்களில் நல்லோர்.. உயர்ந்தோர்..!"
- என்ற முழக்கங்கள் மனிதனை அடிமைப்படுத்தியிருந்த அத்தனை சங்கலிகளையும் உடைத்தெறிந்தன. இது இஸ்லாத்தால் மட்டுமே முடிந்தது.
- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.
''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
0 comments:
Post a Comment