NewsBlog

Tuesday, October 13, 2015

இறைவன் அழைக்கின்றான் - 1: 'இதுவே உன்னத அழைப்பு!'

அழைப்பு..!

எத்தனை எத்தனை அழைப்புகள்..!

"அறிவொளியின்மைதான் சமூக வீழ்ச்சிக்கு முதற்காரணம். எனவே, அறிவொளிப் பெற்று புத்துலகம் சமைக்க மக்களே வாருங்கள்! நாட்டின் வளத்துக்கான கதவுகளை திறக்க வாருங்கள்!" - என்றொரு அழைப்பு.

"அதி நவீன தகவல் தொழில் நுட்பமே இன்றைய தேவை. இதில்தான் தொழில் வளர்ச்சியும், நாட்டு வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபட வாருங்கள்!" - என்று மற்றொரு அழைப்பு.

"பொருள் இல்லையேல் வாழ்க்கை இல்லை. அதனால், பொருளாதார தன்னிறைவுக்கான வழிகளைத் தேடுவோம் வாருங்கள்!" - இப்படி ஓர் அழைப்பு.

இவை அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வருகிறது இன்னொரு அழைப்பு.

"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர!"

இந்த அழைப்புகளை செவிகொடுத்து மனக்கதைவை திறந்துவிட்டு தேடிச் சென்றோர் பலருண்டு. காலமும், செல்வமும், திறமையும் ஒன்று சேர அர்ப்பணித்தோரும் உண்டு. கடைசியில், தமது பிரச்சினைகள் தீராமல் ஏமாந்து போனோரும் உண்டு. இந்த கசப்பான அனுபவங்களால் எந்த அழைப்பிற்கு செவி கொடுப்பது என்று தீர்மானிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படுகிறது.

ஆனால், உலகங்களின் அதிபதியான இறைவன் மனித அழைப்புகள் அனைத்தையும்விட உத்தம அழைப்பொன்றை இப்படி விடுக்கின்றான் கேளுங்கள்:

"எவர் இறைவனின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் - இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன் - என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கின்றார்"  (திருக்குர்ஆன் - 41:33)

செவிமடுப்போமா?
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive