90களில் ரமளான் பெருநாளை ஒட்டி நடத்தப்பட்ட ஒரு சமய நல்லிணக்கக் கூட்டத்தில் பிரமுகர் ஒருவர் தனது தாய்நாட்டை கொச்சைப்படுத்திய தற்காக எனது மகள் மர்யம் கதறி அழுத சம்பவத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.** இதைத் தொடர்ந்து ஜுன் 6, 2002 மாலை 7.15 மணியளவில், தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் பீட்டர் அல்போன்ஸ், பிரபல நாவலாசிரியர் பிரபஞ்சன், மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே.வசந்தி தேவி, கலைஞர் சாருஹாஸன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி, மனித உரிமைப் போராளி பா.ரவிக்குமார், மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் இவர்களுடன் நானும் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.
அது
குஜராத் இனப் படுகொலை குறித்து காலச்சுவடு இலக்கிய இதழ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கமாகும்.
அதன்பிறகு,
இந்த கருத்தரங்கம் சம்பந்தமாக மதுரையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சிந்தனை சரம் மாத
இதழ் ‘நிகழ்வு’ என்னும் பகுதியில் பிரசுரித்திருந்தது. குஜராத் வன்முறை, காலச்சுவடு
கருத்தரங்கின் வழியே ஒரு பார்வையும், பல கவலைகளும் என்னும் தலைப்பில் பதிவு செய்திருந்தது.
அதை மரிய நேசன் எழுதியிருந்தார்.
அவர்
எனது பேச்சை இப்படி குறிப்பிட்டிருந்தார்: “இக்வான் அமீர் கையிலே பல குறிப்புகள். இதுரைவயில்
மேடையில் பேசியவர்கள் அனைவரும் வெடித்துக் கொந்தளித்தபோது, இக்வான் அமீரின் குரல் சாந்தமாக
ஒலிக்க ஆரம்பித்தது. அது பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலை, நகலெடுத்துக் கொண்டதுபோல
ஆவேசம் அற்றிருந்தது. குஜராத்தில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி, சமய நல்லிணக்கத்தைப்
பேசிய முஸ்லிம்கள் எல்லாம் கூட ஓட.. ஓட.. விரட்டியடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அவர்
விவரித்தார். இரண்டு கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் கிராமங்களின் பெயர்களை
இராமாயண, மகாபாரத எனச் சூட்டி மத நல்லிணக்கத்துக்குச் சாட்சியா வாழ்ந்ததையும், அவ்வாறு
வாழ்ந்த மக்களுமே இந்து மத வெறியர்களால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதையும் கூறிய
அமீர், தற்போது தாங்கள் அடைக்கலமாகியுள்ள முகாம்களின் பெயர்களையும் இராமாயண, மகாபாரத
என்று சூட்டியிருப்பதாகச் சொன்னார்.
தன்
மகள் மர்யம் பத்து வயது சிறுமியாக இருந்தபோது, இந்தியத் தேச பக்தியைக் கேலி செய்த ஒருவர்
மேடையில் பேசிய போது, “இவரையெல்லாம் யார் பேச அனுமதித்தார்கள்?” – எனச் சீறி சினந்ததாகவும்,
அதே மகள் இன்றையக் கல்லூரி மாணவி என்ற ஸ்தானத்தில் இந்திய அரசியல் – மதச்சார்பின்மை
குறித்த பலவிதமான கேள்விகளும், கவலைகளும், குழப்பங்களும் நிறைந்த மனநிலையைக் கொண்டிருப்பதாகவும்
கூறினார் இக்வான் அமீர்.
இன்றையக்
கூட்டத்திற்கு தனது மகளை அழைத்து வந்திருப்பதாகவும், இங்கே கூடியிருப்போரைச் சுட்டிக்காட்டி,
“இவர்கள் குறைவாக இருந்தாலும், இருக்கின்ற ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சமம்!” – என்று
தன் மகளிடம் சொன்னதாக அவர் தெரிவித்தபோது, அந்த அரங்கினை நிறைத்தன கைத்தட்டல்கள்.
(ஆதாரம்: சிந்தனை சரம் ஜுலை 2002 – பக். 75)
இந்த
சம்பவங்கள் நடந்து சுமார் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அதே மர்யம் திருமணமாகி குழந்தைகளுக்கும்
தாயாகிவிட்டாள். இந்த நாடும், இந்த நாட்டு மக்கள் குறித்தும், இங்கு பின்பற்றப்பட்டுவரும்
நீதி, நியமங்கள் குறித்தும் அவளது மன நிலையிலும் ஏக மாற்றங்கள். அவமானங்கள். நிராசைகள்
என்று ஏகப்பட்ட பின்னல்களாய் தடுமாற்றங்கள்.
25
ஆண்டுகளுக்கு முன் சிறுவர், சிறுமிகளாக இருந்து இன்று இளம் வயதைக் கடந்து கொண்டிருக்கும்
இத்தகைய நபர்களால்தான் சூழப்பட்டிருக்கிறது இந்திய நாட்டின் எதிர்காலம்.
·
அஜ்மல்
கசாப்
·
அப்சல்
குரு
·
யாகூப் மேமன்
இதில்,
மார்ச் 12, 1993-ல் நடந்த மும்பை குண்டுவெடிப்புகள் சம்பந்தப்பட்ட வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டு மகாராட்டிராவின், நாக்பூர் மத்திய சிறைச்சாலையில், அடைக்கப்பட்டிருந்தவர்
யாகூப் மேமன். ‘தான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டதாகவும், ஏதாவது அற்புதம்
நடந்தாலேயொழிய தன்னை யாராலும் காப்பாற்ற முடியாது!’ - என்றும் மரண மேடைக்கு
செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சிறைக்காவலர் ஒருவரிடம்
சொன்னதாக மிட்-டே நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்
ரானா அய்யூப் தெரிவிக்கும்போது, “சிறைக்கு
வெளியே குழுமியிருந்த கூட்டத்தினர், உற்சாக கோஷங்களை எழுப்பிக்
கொண்டிருந்ததையும், “பாரத்.. மாதா.. கீ..
ஜெய்!” – என்று முழக்கமிட்டுக் கொண்டு
ஷெல்பிக்கள் எடுத்துக் கொண்டிருந்ததையும் பதிவு செய்கிறார்.
மும்பை
உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஆளுநர், குடியரசு தலைவர் என்று பல்வேறு
மேல்முறையீடுகளுக்குப் பின்னும், 53 வயதான
யாகூப் மேமன் தனது 54வது பிறந்தநாளில், வியாழன் அன்று சட்ட ரீதியாக
கொல்லப்பட்டார்.
வியாழன்
அன்று அதிகாலை 6.35 மணியளவில் மேமனின் மரணத்தை மருத்துவக்குழு உறுதி செய்தது. அவரை
அடக்கம் செய்வதற்கு சிறைவளாகத்திலேயே இடமும் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. கடைசியில்
உறவினர்களிடம் ஏராளமான நிபந்தனைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாகூப்
மேமனின் சட்ட ரீதியான அரசு கொலைப்படலம் அனைத்தும் ஒரு மாஜிஸ்ட்ரேட்டின்
முன்னிலையில் நடந்தது. அது சம்பந்தமான ஒளிபதிவும் செய்யப்பட்டது.
சரி.
இந்த நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் சமம் என்றால்,
- பாபரி மசூதியை இடித்த பயங்கரவாதிகளுக்கு தண்டனை எப்போது?
- பாபரி மசூதி இடிக்கப்பட்டதை ஒட்டி மும்பையில் கொடூரமான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்களே இந்துத்துவ பயங்கரவாதிகள் அவர்களுக்கான தூக்குத் தண்டனை எப்போது?
- நீதியரசர் கிருஷ்ணா கமிஷன் மும்பைக் கலவரத்துக்குக் காரணமானவர்கள் யார் யார் என்று பெயர் குறிப்பிட்டே அறிக்கை தந்தாரே அந்த அறிக்கை என்னவானது?
- மாலேகவுன் குண்டுவெடிப்புகள், சம்ஜவுத் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுக்கு எப்போது மரண தண்டனை? இந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி வழங்கப்போவது எப்போது?
- ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பயங்கரவாத கயவர்களுக்கு எப்போது மரண தண்டனை?
- மனித இனம் பதறும் வண்ணம் உயிரோடு எரித்தும், கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தும், கற்பழித்தும் ஆயிரக் கணக்கில் குவியல் குவியலாய் குஜராத்தில் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைதான் என்ன?
- இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர்களுக்கு காரணமானவர்களுக்கு எப்போது தூக்குத்தண்டனை?
- ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான காவல்துறை அதிகாரியைச் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை தரப்போவது எப்போது?
- காஞ்சிபுரம் கோவிலிலேயே சங்கரராமன் என்பவர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டாரே, அந்தக் கொலையாளிகளுக்கு எப்போது மரண தண்டனை?
இந்தக்
கேள்விகளுக்கு எல்லாம் ஒரு கால் நூற்றாண்டு கடந்து இந்திய நாட்டின்
ஒருமைப்பாட்டின் மீதும், அது ஒரு சார்பாய் பின்பற்றிவரும் நீதி, நியமங்கள் மீதும்
அவநம்பிக்கையில் உழலும், ஆயிரக்கணக்கான இளைஞர், இளைஞிகளுக்கு சமாதானம்
சொல்லப்பபோவது யார்? மேற்கண்ட இந்த கேள்விகளுக்கு எல்லாம் சொல்லப்போகும்
பதில்கள்தான் என்ன? நமது இருசார்பு நடைமுறைகளால் ஏற்னவே ஏராளமான சமூக பிரச்னைகளின்
தீவிரத்தன்மை பல்வேறு வடிவங்களால் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும்போது,
ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான நாம் கடைப்பிடிக்கும் சம
நீதியற்ற போக்கின் எதிர்வினைகள் மேலெழும்போது அவை இன்னும் பெருத்த சீர்குலைவுகளை
நாட்டில் ஏற்படுத்தாதா?
இன்னும் எத்தனை நாளைக்கு வெள்ளையர் அடிமைத்தன சட்டங்களை நாம் சிலுவைகளாய் சுமப்பது?
தண்ணீர் என்ற அத்யாவசிய தேவைக்கு மக்கள் போராடினாலும்கூட அவர்களின் மண்டைகளை உடைத்தெறியும் காவல்துறை சட்டங்களை எப்போது தூக்கி வீசப் போகிறோம்?
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நான் அவமானத்தால் தலை குனிந்து போகிறேன்? "பேய்கள் அரசாளும் போது சாத்திரங்கள் பிணந்தின்னத்தானே வேண்டும்" – என்று மௌனமாய் குமைகிறேன்.
நீங்கள்?
இறைவன் நாடினால், வைகறை நினைவுகள் தொடரும்.
** இணைப்பு: https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/503424359810598
இன்னும் எத்தனை நாளைக்கு வெள்ளையர் அடிமைத்தன சட்டங்களை நாம் சிலுவைகளாய் சுமப்பது?
தண்ணீர் என்ற அத்யாவசிய தேவைக்கு மக்கள் போராடினாலும்கூட அவர்களின் மண்டைகளை உடைத்தெறியும் காவல்துறை சட்டங்களை எப்போது தூக்கி வீசப் போகிறோம்?
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நான் அவமானத்தால் தலை குனிந்து போகிறேன்? "பேய்கள் அரசாளும் போது சாத்திரங்கள் பிணந்தின்னத்தானே வேண்டும்" – என்று மௌனமாய் குமைகிறேன்.
நீங்கள்?
இறைவன் நாடினால், வைகறை நினைவுகள் தொடரும்.
** இணைப்பு: https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/503424359810598
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இதற்கு
முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை
நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:
- http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை
நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்:
http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை
நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை
நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்:
http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை
நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
0 comments:
Post a Comment