NewsBlog

Monday, March 20, 2017

முதிர்ச்சியை நோக்கி முஸ்லிம் சமூகம்..

அவர்களிலிருந்தே சொல்ல வேண்டும். அவர்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதற்காகதான் காலந்தோறும் அந்தந்த சமூக மக்களிடையே இறைவன் பரப்புரையாளர்களை – தூதர்களை அனுப்பி வைத்தான். மண், மக்கள், மொழி, கலாச்சாரம் நம்பிக்கைகள், புரிந்துணர்வுகள் என்று எல்லாமுமாய் மாறி அந்த பரப்புரையை- இறைவனின் திருச் செய்தியை http://ikhwanameer.blogspot.in/2015/12/blog-post_25.html அந்த இறைத்தூதர்கள் சுமந்து நின்றார்கள். பிணைக்க முடியாத சொந்த, பந்த உணர்வுடன் அந்த சமூக மக்களிடையே பணியாற்றினார்கள். மக்கள் மனங்களை வென்றார்கள்.

இந்த பேருண்மையை பச்சைத் துணியில் கட்டி பரண் மீது வைத்துவிட்டது இந்த சமூகம் அல்லது வெள்ளி மேடைகளில் மட்டும் மெல்லிய உறக்கத்தினிடையே தாலாட்டும், தலையாட்டலுமாய் உள்ளது.

நபிகளாரின் திருச்செய்தியை புரிய வைத்தல், புரிதல் இல்லாமையாய் இந்த சமூகம் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளாடிக் கொண்டிருக்கையில், உலகம் பல நூற்றாண்டுகளைக் கடந்து விண்வெளி யுகத்திற்கு வந்துவிட்டது.

அடுத்தது, கற்றறிந்தவர்கள், கொள்கைக் கோட்பாடுகளை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் எந்த நேரத்தில் எந்த பத்ஃவா வருமோ என்று அச்ச உணர்வுடன் தனது கொள்கையை பொதுவெளியில் சேர்க்க தேவையற்ற நேரத்தை வீணாக்கி சொற்களைத் தேடுவதும், அதிக பட்ச கவனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிறது.

இந்த மனநிலையை சொற்களில் வடிக்க இயலாது. அதிலும் என்னைப் போல எழுத்துத் துறையில் இருப்போர் ஆளாகும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல.

சுருக்கமாக சொல்ல போனால், எதை நோக்கி நாம் செல்கிறோமோ அதுவாக மாறி, உள்வாங்கி பொதுவெளியில் எந்த தட்டுத் தடங்கலும் இல்லாமல் நமது கருத்துக்களை சேர்க்கும் முதிர்ச்சிக்கு இந்த சமூகமும் கரங்கோர்க்க வேண்டும். பட்டங்களையும், பட்டயங்களையும் தர வேண்டாம். குறைந்தளவு அத்தகையவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும்.

காலத்திற்கேற்ற புரிதலும், அந்த புரிதலோடு அக்காலத்தில் நுழைந்து வெற்றிப் பெறுதலும்தான் தற்போதைய அதி தீவிரமான தேவைகள். பெரும்பகுதி பிரச்னைகளுக்கு தீர்வுகள்.
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive