சவுதி சமூகத்தில் குழந்தை தொழிலாளர்கள் உருவாகும் காரணிகள் தொடர்பாக அண்மையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
காஸிம் பல்கலைக்கழகத்தால் 12-14 இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 89 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் சவுதி நாட்டினர் என்று தெரியவந்தது.
பல்வேறு தொழிலகங்களில் பணிப்புரியும் குழந்தைத் தொழிலாளர்களின் 70 விழுக்காடு பெற்றோர் கல்லாதவர்கள் என்றும், 30 விழுக்காடு பேர் படித்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. .
48 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்களில் 37 விழுக்காடு பேர் ஆரம்ப பள்ளிக்கூட நிலையிலும், 7 விழுக்காடு பேர் உயர்நிலை கல்வி நிலையிலும் படிப்பை தொடர முடியாமல் போனவர்கள்.
8-15 இடைப்பட்ட வயதுடையோர் மத்தியில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் 49 விழுக்காடு பேர் 8 பேர் கொண்ட பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 77 விழுக்காடு குடும்பங்கள், குடும்பத்தலைவரின் வருமானத்தைச் சார்ந்திருப்பதும் ஆய்வில் வெளியானது.
குழந்தைத் தொழிலாளர்களில், 54 விழுக்காடு பேர் காய்கறி வியாபாரத்திலும், 38 விழுக்காடு பேர் சரக்குகளை விநியோகிக்கும் பணிகளிலும், 8 விழுக்காடு பேர் துப்புறவு பணிகளிலும் ஈடுபடுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
43 விழுக்காடு பேர் நாளொன்றுக்கு 50 சவுதி ரியால்களுக்கும், மற்றவர்கள் அதற்கும் குறைவான ஊதியத்திலும் பணிபுரிவதாக காஸிம் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment