காற்று அதிகளவு
மாசு அடைவது மிகை காற்று மாசு எனப்படுகிறது. மிகை காற்று மாசு ஏற்பட்டால்,
மாசு துகள்கள் நுரையீரலில் நிரம்பிவிடுகிறன. இதனால், நாம் உயிர் வாழ
இன்றியமையாத பிராணவாயுவான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு
குறைந்துவிடுகிறது. அத்துடன் உடலுக்கு சீராக ஆக்சிஜன் செல்வது
பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும்.
நாளடைவில் மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும்.
இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு
நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. ~ இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வடசென்னை மணலியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், அந்தப் பகுதியில் வாழும் மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
சென்னையில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி வடசென்னை. அதில் மணலி, இரசாயன ஆலைகளின் கேந்திரமாக உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் அதனால் ஏற்படும் கனரக வாகன போக்குவரத்தால், அப்பகுதியில் அண்மைக் காலமாக காற்று மாசடைவது அதிகரித்து வருகிறது. http://tamil.thehindu.com/tamilnadu/article19443454.ece இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கலந்துள்ளன என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை நுண்ணிய துகள்கள் இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாகும்.
ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மணலியில் தொடர்ந்து 7 நாட்கள் காற்றில் அதிக மாசு கலந்துள்ளது பதிவானது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் அதிகபட்ச சராசரி அளவாக, காற்றில் உள்ள துகள்களின் அளவு, முறையே 362, 361 மைக்ரோ கிராமும், அதே நாட்களில் அதிகபட்சமாக முறையே 417, 500 மைக்ரோ கிராமும் பதிவாகியுள்ளது.
“இப்பகுதியில் தொழிற்சாலைகள் இயங்கும்போது, சாப்பிடும் உணவில் கரித்துகள்கள் விழுந்து கலக்கின்றன. இதனால், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இன்னும் தீராத சளித்தொல்லைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுவை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”- அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்படி புலம்புகின்றனர்.
“பல ஆண்டுகளாக மணலி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நட வடிக்கை எடுப்பதே இல்லை. தற்போதுள்ள நிலை, விஷவாயு நிரப்பிய அறையில் பொதுமக்கள் வசிப்பதற்கு சமமாக உள்ளது. எனவே காற்று மாசுக்கான காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ந்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆயத்த பதில் அளிப்பதற்கு பதிலாக உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனோ, “மணலியில் காற்று மாசுபடுவதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்கிறார்.
காற்று அதிகளவு மாசு அடைவது மிகை காற்று மாசு எனப்படுகிறது. மிகை காற்று மாசு ஏற்பட்டால், மாசு துகள்கள் நுரையீரலில் நிரம்பிவிடுகிறன. இதனால், நாம் உயிர் வாழ இன்றியமையாத பிராணவாயுவான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைந்துவிடுகிறது. அத்துடன் உடலுக்கு சீராக ஆக்சிஜன் செல்வது பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். நாளடைவில் மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்க,
• மக்கள் வசிப்பிடங்களை மாற்றியாக வேண்டும் அல்லது
• வீட்டின் வாயில், ஜன்னல் கதவுகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.
• வசதி உள்ளோர் வேண்டுமானால், காற்று சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்தலாம்.
எப்போதும் பாவப்பட்ட ஜனங்களான வடசென்னைவாசிகள் வழக்கமான மௌனத்தில் கரைந்து நிற்காமல் தங்களால் இயன்ற இந்த செயலையாவது செய்ய வேண்டும். அது வடசென்னையை மரங்களால் நிரம்பிய வனங்களாக்கிவிடுவது.
வேறு என்னதான் செய்வது? அரசும், நமது அரசியல் நாயகர்களும் நம்மை காக்காதபோது இயற்கையின் காவலர்களான மரங்களின் துணை நாடுவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை.
0 comments:
Post a Comment