'நல்ல நாள்', 'சப்கா சா'த், 'சப்கா விகாஸ்', 'மேக் இன் இண்டியா', 'தொழில் செய்வது சுலபம்' உள்ளிட்ட மத்திய அரசின் கோஷங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான். ஏழைகளுக்கும் குறிப்பாக சாலைப் போக்குவரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது வெறும் கற்பனை மட்டுமே!
அதீத வரிவிதிப்புகள், பின்னடையச் செய்யும் கொள்கைகள், சட்டங்கள் போன்றவை சாலைப் போக்குவரத்துத் துறையை மேலும் அழிப்பதுடன், ஊழல், முறைகேடு, மிரட்டிப் பணம் பறித்தல் போன்றவற்றையே வலுப்படுத்தும்.
டோல் கட்டணங்கள் உண்மையாகவே காலனி ஆதிக்கத்தின் குறியீடுகள். இவை, அத்துமீறல்கள் மற்றும் ஊழலின் கூடாரங்களாக உள்ளன. சுங்கச் சாவடிகளில் அசுரத்தனமாக வளரும் ஊழல், அத்துமீறல்கள், காலவிரயம் ஆகியவை காரணமாக இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் நலனை நீடித்திருக்கச் செய்யாது. எனவே வருவாய் வேண்டுமெனில் அவற்றை மறைமுக வரியாக வசூலிக்கலாம்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 373 சுங்கச் சாவடிகள் ரூ.1.73 லட்சம் கோடி முதலீ்ட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 72 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 14,192 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்ட 63 சுங்கச் சாவடிகளில் இருந்து ரூ.22,636 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
டோல் கட்டண வசூல் என்பது வெளிப்படையாக இல்லை.
ஐஐஎம் ஆய்வின்படி அடிக்கடி வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மனித உழைப்பு மற்றும் எரிபொருள் இழப்பு போன்ற இழப்புகளால் ரூ. 87 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment