NewsBlog

Friday, August 14, 2015

அழைப்பது நம் கடமை: 6, சான்று வழங்குதல் என்பது என்ன?



சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. இறைநெறியை, இஸ்லாத்தை, சத்தியத்தை மனித குலத்துக்கு எடுத்துரைப்பது சான்று வழங்குதல் எனப்படும். அது தனிநபராக இருந்தாலும் சரி.. சமுதாயமாக இருந்தாலும் சரி.

முதல் மனிதரும், ஆதிபிதாவுமான ஆதம் நபிக்கு இறைவன் நேர்வழி காட்டினான்.

"திண்ணமாக வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும்!" (திருக்குர்ஆன்- 92:12)

இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் தனது வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுத்தான். மனிதர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள்தான் நபிமார்கள். இறைத்தூதர்கள். தீர்க்கதரிசிகள் எனப்படுகின்றனர்.

"ஒவ்வொரு சமூகத்துக்கும் வழிகாட்டும் ஒருவர் இருக்கிறார்!" - (திருக்குர்ஆன் - 13:7)

""எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை"- (திருக்குர்அன் - 35:24)

நூஹ் நபி, இப்ராஹீம் நபி, மூஸா நபி (இவர்கள் அனைவர் மீதும் இறையருள் பொழிவதாக!) இறைவனின் தூதர்களாக அனுப்பப்பட்டவர்கள்தான். 


இறைவனின் திருத்தூதை சமர்பிக்க எண்ணற்ற பிரச்சினைகளை, துன்பங்களை சந்தித்தவர்கள். இப்படி ஆயிரக்கணக்கான இறைத்தூதர்கள் மனிதர்களுக்கான வாழ்வியல் நெறியை போதிப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

இறைவனின் தூதர் இப்ராஹீம் நபியவர்கள் (இறையருள் பொழிவதாக!) உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தார்கள். இறைவனின் திருமுன் பணிவதைத் தவிர ... இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு எந்த ஆசையும் அவர்கள் கொண்டதில்லை. இஸ்லாம் என்னும் பிரபஞ்ச இயல் ஒன்றுதான் முதலும்-முடிவுமான மனிதகுலத்துக்கான வாழ்க்கைநெறியாக அவர்கள் நம்பினார்கள். அவர்களது சந்ததியினரான இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் நபிமார்களும் (இறையருள் பொழிவதாக!) அவர்களின் வழித்தோன்றல்கள் (ஜாக்கோப்பின் 12 கோத்திரத்தினரான பனீ இஸ்ராயீல்கள்) இந்த பொக்கிஷத்தை மூஸா நபியிடமும், அதைத் தொடர்ந்து ஈஸா நபியிடமும் இறைவனின் விருப்பப்படியே சேர்த்தார்கள்.

இப்ராஹீம் நபியவர்களின் வரலாறு திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. 


பரம்பொருள் ஒன்றென அவர் அறிந்துணர்ந்து கொண்டது

ஒழுக்கமான மாண்புகளையே உயிராகக் கொண்டது.

இறைவனுக்கு அடிப்பணிதலில் முதல்வனாக நின்றது.

கொள்கைக்காக முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தது.

- என்று தொடரும்  தியாகத்தின் வரலாறு அது.

--- அழைப்பது தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5.சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive