NewsBlog

Monday, August 3, 2015

அழைப்பது நம் கடமை - 4, அழைக்க வேண்டும். ஏன்?


சத்தியத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் அதை மற்றவருக்கு எடுத்து வைக்க வேண்டியது உலக நியதி.

டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் கண்டுப்பிடித்து ரகசியமாக வைத்திருந்தால்.. என்ன பயன்? அது மனித நேய செயல் ஆகாதே! இன்று நம்மிடையே கதிகலங்கச் செய்யும் இந்த கொடிய நோய்க்கு கண்டுபிடித்த மருந்தை எவ்வளவு வேகமாக அடுத்தவர்க்கு கிடைக்கச் செய்கிறோமோ அந்தளவுக்கு உலகின்  பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.

அதேபோலதான், வாழ வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மனித இனத்துக்கு வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான மருந்தும். இது மார்க்க ரீதியாக, தார்மீக ரீதியாக முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பாகும். முஸ்லிம்களுக்கு மற்றவரையும் இறைவனின் பக்கம் அழைக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது.

மனித இனத்தின் ஓர் அங்கம்தான் முஸ்லிம்கள். அவர்கள் வாழ வழித் தெரியாமல் தவிப்போருக்கு வழிக்காட்ட வேண்டியது மனித நேயமாகும். சகோதரத்துவ வாஞ்சையாகும். நிறத்தையும், மதத்தையும், இனத்தையும், தேசத்தையும் மொத்தத்தில் எல்லைகளைத் தாண்டிய நேசிப்பு இது! மனித இனத்தை பகுத்தறிவின் பக்கம் அழைத்து நல்வழியில் செலுத்தும் தார்மீக பொறுப்பு.

இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ள பல்வேறு நம்பிக்கைகளின் ஆதிமூலமாக இருப்பது இஸ்லாம். ஆக தனது பழைய தாய் மார்க்கத்தின் பக்கம் அழைத்து 'ஓர் இறை.. ஓர் நிறை..!' என்று பிரகடனப்படுத்துவதும் முஸ்லிம்களின் கடமையாகும். இஸ்லாம் என்னும் வாழ்வியல் நெறி-பிரபஞ்ச இயக்கம் உலக மக்களுக்குச் சொந்தமானது.

அவரவரின் உடமையை அவரவரிடம் சேர்ப்பதுதானே முறை?

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்

'''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அந்த கடலோர கிராமத்தின் கதை - 1, http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

ஒரு கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் - 2 http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு - 3, http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive