NewsBlog

Thursday, April 23, 2020

Coconut Shell Pots For Seedlings and Plants - கொட்டாங்கச்சியில் செடி வள...

Share:

2 comments:

  1. காணொளி பார்த்தேன் ஐயா ..நீங்க சொல்வது சரி அணில்கள் பட்டாம்பூச்சிகள் தேனீக்களுக்கு செடி வளரனும் .இவ்வுலகம் நம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் .நான் தோட்டத்தில் வளரும் dandelion செடிகளைக்கூட பிய்ப்பதில்லை காரணம் அவை தேனீக்களுக்கு உணவுன்னு சொல்றாங்க .நைஜெல்லா பொப்பி இதெல்லாம் வளருது எங்க தோட்டத்தில் சிற்றுயிர்களுக்கும் இடம்கொடுப்போம் .

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சியம்மா. பல்லாண்டுகளாக எனது தோட்டத்தில் தங்களுக்கென்று இடம் அமைத்துகொண்டுள்ளன தேனீக்கள். அணில்களும் அதிகம். என் நண்பர்களாய் ஓணான்கள். வீடிழந்து வனங்களிலிருந்து விரட்டப்பட்ட குரங்குகள் அவ்வப்போது தோட்டத்தில் படையெடுக்கும். இவற்றைத் தவிர, தும்பிகள், வண்ணத்திகள், வண்டுகள் என்று கண்ணுக்கு தெரிந்த, தெரியாத பூச்சிகள் என்று உயிரிகளின் உறைவிடம்.

      கீழ்த்தளத்தில், மூங்கில்கள், கொய்யா, சப்போட்டா, கொர்கலிகா, முருங்கை, ரங்கூன் மல்லி, மணிபிளான்ட்டின் பல்வேறு வகைகள், ஸ்பைடர் பிளான்டுகள், மனோரஞ்சிதம், பையர் புஷ், ஹெலிகானியா, தென்னை, பனை, பேரீச்சம் என்று ஒரு குறுங்காடாக மாற்றும் முயற்சி நடக்கிறது.

      நான் வடசென்னைவாசி. சூழல்மாசுவிலிருந்து எங்களைக் காத்துக் கொள்ள இதை விட்டால் வேறு மாற்று வழியில்லை.

      ஊரடங்கு முடிந்ததும், ஓய்விருந்தால், ஒரு நாள் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வாருங்கள்.

      கொரானாவில் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்.

      மதிப்பு மிக்க தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

      Delete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive