‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இக்வான் அமீர்
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
மோடி
சர்க்காரிடமிருந்து, அடுத்து என்ன அறிவிப்பு வருமோ என்று திகிலுடன் தொலைக்காட்சி முன்
அமர்ந்திருந்தபோது, மே, 3-ம் தேதிவரை
ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டு வழக்கம்போல உரையாற்றி முடித்து
கொண்டார் அவர். நல்லவேளை, மோடியின் சொல்லுக்கு வரிந்து கட்டி
அடிபணிபவர்களின் அட்டகாசங்களிலிருந்து தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ராணுவ
வீரர்களைப் போல நீங்கள் நாட்டுக்காக செயல்படுகிறீர்கள் என்று மோடி சர்க்கார்
சொன்னதும்,
• தனது அதிரடியான பணமதிப்பிழப்பு அறிவிப்பின் மூலமாக வங்கிகளின் வாசலில்
நின்ற ராணுவம் போன்ற மக்கள் வரிசையும்,
• தற்போது திடீர் ஊரடங்கு மூலமாக நாட்டு மக்களை ராணுவம் போலவே பல நூறு
மைல்கள் நடக்க வைத்ததும் நினைவில் எழுகிறது.
அய்யா, புண்ணியவானே, ராணுவத்துக்கும் சோறு போடுங்க. எங்களுக்கும் சோறு போட்டுட்டு பிறகு
மன்கீபாத்களில் வந்து பேசுங்க மகாராசா என்கிறது உள்மனம்.
கொரானா
சம்பந்தமான வெளிப்படைத்தன்மையும், அதிலிருந்து மீளுவதற்கான தக்க நடவடிக்கைகளும்தான் சராசரி
இந்தியன் தற்போது வேண்டுவது. கொரானா மரணங்களைவிட பசி, பட்டினி
மரணங்கள் முந்திவிடும் என்கிறன நடப்பு தரவுகள். அதனால், வெறும்
அலங்கார பேச்சுகளோ, அரிதாரம் பூசப்பட்ட முகங்களோ தற்போதைய
தேவை அல்ல.
நாட்டின்
பிரதமர் இப்படி என்றால் அவர் கீழ் பணியாற்றும் அரசு எந்திரமோ பிரதமரின் வகுப்புவாத
எண்ணங்களின் படியே அடிபிசகாமல் செயல்பட்டுவருகிறது.
கொரானா தீநுண்மி
முஸ்லிம்களை குறிவைக்கிறதோ இல்லையோ அதை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சி, அதிகாரமோ வகுப்புவாத
பாகுபாட்டுடனேயே நடந்து கொள்கிறது.
நிஜாமுதீனின்
தப்லிக் ஜமாத் மார்க்கஸிலிருந்து சத்தீஸ்கரிலிருந்து திரும்பிய 159 பேரின் பட்டியலை
பிபிசிக்கு கொடுத்தார் மனுதாரரின் வழக்கறிஞர் கெளதம் க்ஷேத்ரபால். அதில் 108
பேர் முஸ்லிம் அல்லாதவர்கள். அனைவரின் பெயர், முகவரி
மற்றும் செல்போன் எண் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவர்களில்
பெரும்பாலோர் தப்லிக் ஜமாஅத்துடனும் இஸ்லாமிய சமயத்துடனும், எந்தவித தொடர்பும்
இல்லாதவர்கள். இவர்கள் அனைவரும் மார்ச் இரண்டாவது, மூன்றாவது
வாரத்தில் டெல்லிக்கு வந்திருந்தனர். டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர், உள்துறை அமைக்கத்தின் சுகாதாரத் துறையின் உத்தரவின் பேரில் தற்போது,
தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில்
சேர்க்கப்பட்ட பிலாஸ்பூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பாண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அவர் பிபிசியிடம் இப்படி சொல்கிறார்: "நான் ஒரு பிராமணன். தப்லிக் ஜமாஅத்தை
சேர்ந்தவர்களுடன் எனக்கு என்னத் தொடர்பு இருக்க முடியும்? மார்ச் மாதத்தில் நான்
டெல்லிக்குச் சென்றிருந்தேன். நான் பிலாஸ்பூருக்கு செல்வதற்காக நிஜாமுதீன் ரயில்
நிலையத்திற்குச் சென்றேன். ஆனால் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸ் உள்ளே
செல்லவேயில்லை. டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு, போலீசார்
மற்றும் சுகாதாரத் துறையினர் என்னிடம் விசாரணை செய்த பிறகு, என்னை
வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கச் சொன்னார்கள்"
ராய்ப்பூரைச்
சேர்ந்த ஜெய்தீப் கவுரும் தப்லிக் ஜமாத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று
மறுக்கிறார்.
"நான் சமீபத்தில் தொலைக்காட்சியில் தான் முதல் முறையாக தப்லிக் ஜமாஅத் என்ற
பெயரைக் கேட்டேன். நான் மார்ச் 16-ஆம் தேதியன்று
டெல்லியிலிருந்து வீடு திரும்பினேன். பிறகு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர்
வந்து என்னிடம் விசாரணை செய்தார்கள். பரிசோதனை செய்த பின்னர், 14 நாட்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னர்கள். அதன்
பின்னர் நான் வீட்டிலேயே இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
துர்க் என்ற
ஊரைச் சேர்ந்த முகமது ஜுபைர் இவ்வாறு கூறுகிறார்: "எனக்கு தப்லிக்
ஜமாஅத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை, இந்த ஆண்டு தப்லிக் ஜமாஅத்தின் எந்தவொரு
நிகழ்விலும் நான் கலந்து கொள்ளவில்லை".
நிஜாமுதீனில்
உள்ள மார்க்கஸில் கூட்டம் நடைபெற்ற நாளின்போது அந்தப் பகுதியில் இருந்தவர்களின்
மொபைல் எண்கள், மொபைல் போன் கோபுரங்களில் பதிவாகியிருந்தன. அந்த தகவல்களின் அடிப்படையில்
அந்தப் பகுதிக்கு சென்று வந்தவர்களின் உடல்நலம் சரிபார்க்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் நிஜாமுதீன் பகுதிக்கு சென்றவர்கள் அல்லது நிஜாமுதீன் ரயில்
நிலையத்திற்கு அந்த வழியாக கடந்து சென்றவர்கள்” - என்று
இதற்கு விளக்கமளிக்கிறார் மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ்.
ஆனால் இந்த 159 பேரின் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ள பிரேம் குமார் சாஹு, "சுகாதாரத்
துறையும் காவல்துறையும் எங்கள் நலத்துக்காகவும், எங்கள்
நன்மைக்காகவும் தகவல்களைச் சேகரித்தன என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த விசாரணையால் சுற்றுவட்டாரத்தில் எங்களை சந்தேகக்கண் கொண்டு ஒருவிதமாக
அல்லவா பார்க்கிறார்கள்” – என்கிறார் வருத்தத்துடன்.
பிரேம் குமார்
சாஹு என்ற ஒருவரின் மனநிலையை, பாதிப்புகளை, உணர்வுகளை புரிந்து கொள்ள
முடிகிறது.
இந்திய
சமூகத்தில், பிரேம் குமார் சாஹு போன்ற விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலருக்கு
உருவாகும் இத்தகைய மனரீதியான துன்பமும், பிரச்னைகளும்,
நெருக்கடிகளும் வகுப்புவாதிகளும், கூலிக்கு
விலைபோன ஊடகங்களும், திட்டமிட்டு இந்திய முஸ்லிம்கள் மீது
சுமத்தியுள்ளது எவ்வளவு பெரிய அநீதி! அக்கிரமம்!
உலக வரலாற்றில்
இதைவிட மோசமான இழப்புகளை சந்தித்த சமூகமே முஸ்லிம் சமூகம். அதனால், இந்த புரளிகளிலிருந்தும்,
வகுப்புவாத வன்மங்களிலிருந்தும் முஸ்லிம்கள் வெகுவிரைவில் தங்கள்
அரும் பண்புகளை முன்னிறுத்தி வெளிவந்துவிடுவார்கள். ஆனால், தவறான
தகவல்கள், வதந்திகள் மூலமாக தற்போது அவர்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனதுன்பங்களுக்கு
யார் மருந்திடுவது?
மோடி
சர்க்காரின் மனம் எப்போது திறக்கும்?
0 comments:
Post a Comment