''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''
எல்லாம்
முஸ்லிம்கள்தான் காரணம் என்று ஊடகங்களும், சங்பரிவார் வகுப்புவாதிகளும் பரப்பிய 'கொரானா சாக்கு' வெறுப்பு பரப்புரைகள் ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் சங்கடங்கள் உருவாக்காமலில்லை.
மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற செல்லும் மருத்துவமனைகளில், அண்டை, அயலார் உறவுகளில் இந்த பொய்ப் பரப்புரை வதந்திகள் அவர்களின் மூளை செல்களில் அமர்ந்துவிட்டது. முஸ்லிம்களின் மீதான அச்ச உணர்வை ஏற்படுத்தி சகஜ தன்மையை சீர்குலைத்துவிட்டது. ஒருவிதமான அச்ச உணர்வுடனும், சங்கோஜத்துடனுமேயே முஸ்லிம்கள் பிரச்னைகளை அணுக வேண்டியதாகிவிட்டது. இது ஒருவிதமான மனயியல் ரீதியான தாக்குதலாகும்.
• முஸ்லிம்களையும், அவர்கள் பின்பற்றும் இஸ்லாமிய
மார்க்கத்தையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அரியணையில்
அமர்ந்திருக்கும் மூர்க்கத்தனமான அரசு அதிகார எந்திரம்.
• மாட்டின் பெயரால் நாடு முழுக்க நடந்த கும்பல் படுகொலைகள்,
• முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியல் கோட்பாடுகளாய் பின்பற்றும் தனியார்
சட்டங்களில் மேற்கொண்ட முத்தலாக் சட்ட திருத்தங்கள்,
• எது எப்படியாயினும் நீதி கிடைக்கும் என்று பெரும் நம்பிக்கையில்
முஸ்லிம்கள் காத்திருந்த பாபரி மஸ்ஜித் பிரச்னையில் தரப்பட்ட ஒருசார்பான தீர்ப்பு,
• முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம்,
• அதைத் தொடர்ந்து ஜாமியக்களில், ஜனநாயக ரீதியாக நடந்த
மாணவர் போராட்டங்களை ஒடுக்க தில்லி காவல்துறை மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான
நடவடிக்கைகள்,
• தங்கள் இருப்புகளை காத்துக் கொள்ள நாடு முழுக்க தெருக்களில் வரலாறு காணாது
ஷாஹின்- பாக்குகளில், திரண்ட முஸ்லிம் பெண்கள்,
• தலைநகர் தில்லியில் அந்த போராட்டங்களை ஒடுக்க களத்தில் இறங்கிய இனவெறி
வகுப்புவாத குண்டர்களின் கொலைவெறித்தனங்களால் ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் கொடூரமான
உயிரிழப்பு, கோடிக்கணக்கான பொருளிழப்பு
- என்று இந்திய
முஸ்லிம் சமூகம் அடுக்கடுக்காய் அனுபவித்த சோகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
இவை
எல்லாவற்றையும், பொறுமையுடனும், சட்ட ரீதியாகவும் முஸ்லிம் சமூகம்
எதிர்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர்கள் மீது பூசப்படும் கொரானா
நோய்த்தொற்று பொய் பரப்புரைகள் என்று ஏக மன அழுத்தங்களில் முஸ்லிம்கள்
தள்ளப்பட்டுள்ளனர்.
உலகிலேயே ஒரு
தீநுண்மிக்கு அதாவது கொரானா வைரஸீக்கு மத சாயம் பூசிய நாடு இந்தியா. இந்தியாவை
ஆளும் வகுப்புவாதமும், வகுப்புவாதத்தின் எடுபிடிகளாக விளங்கும் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிட்ட
பொய்-புனைவுகள் இன்று நாட்டின் பட்டிதொட்டிகள் எல்லாம் சேர்ந்து முஸ்லிம்களை
அந்நியப்படுத்தி நிற்கின்றன.
நாட்டை ஆளும்
வகுப்புவாதிகளுக்கு கொரானா தீநுண்மியை எதிர்கொள்ள திராணி இல்லை அல்லது மக்கள் மீது
அக்கறையில்லை என்பதையே இந்த பொய், புனைவு, புரளிகள் காட்டுகின்றன. இந்திய
சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வகுப்புவாதிகள் இழைக்கும் அநீதிகள் இத்தகையவை
என்றால் அது பொது சமூகத்தின் மேன்மைக்கும் ஒரு திட்டத்தையும் வகுக்கவில்லை என்பதே
உண்மை.
ஆம். இந்திய
பொதுசமூகத்துக்கு வகுப்புவாதிகளால் ஒரு நன்மையும் பயக்கவில்லை என்பதையே அவர்களின்
கடந்தகால செயல்பாடுகள் காட்டுகின்றன.
👺😈
வெறும் சமய வெறியூட்டியதும்,
👺😈
உலகத்தின் உயரமான சிலை என்று கோடி கோடியாய் இந்தியரின் பணத்தை வாரி
இறைத்ததும்,
👺😈
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் என்ற பெயரால் இந்தியரை தெருக்களில்
பிச்சைக்காரர் போல நடத்தியதும்,
👺😈
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால், நடைபாதை வணிகர்கள் உட்பட சராசரி வணிகரின் வாழ்வியலை நசுக்கியதும்
👺😈
தற்போது, திடீர் அறிப்பான ஊரடங்கு உத்திரவால்
நாட்டு மக்களை நூற்றுக் கணக்கான மைல்கள் நடக்க வைத்ததும்,
- என்றுமாய் இந்த சாதனைகள் தொடர்கின்றன.
விரல்விட்டு
எண்ணக்கூடிய ஒருசிலரின் வாழ்வாதாரம் சிறக்க பெரும்பகுதி இந்தியரின் வாழ்வதாரத்தை
நசுக்கியதாய் ஆட்சி அதிகாரம் தொடர்கிறது. நாடு பெருத்த பொருளியல் சரிவுக்கு வந்த
பிறகு, மீள முடியாத பேரழிவை சந்தித்திருக்கும்போது, அந்த
உண்மையை மறைக்க மீண்டும் கொரானா வகுப்புவாத சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின்
கணிசமான மக்கள் மத போதையில், திளைத்திருக்கும் விதமாய் திட்டமிட்டு கருத்துருவாக்கங்கள்
உருவாக்கப்படுகிறது. எல்லாமே கூலிக்கு மாறடிக்கும் கூட்டம்தான். பொய்களும்,
புனைவுகளுமான தரவுகளும், பரப்புரைகளும்
கொள்கை-கோட்பாடுகளுமாய் ஆட்சி-அதிகார எந்திரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவுடன்
ஒப்பிடும்போது, தென் கொரியா நம்மைவிட ஒரு சிறிய நாடு. அதற்கும் ஏராளமான உள்நாட்டு
பிரச்னைகள். தற்போது கொரானா தீநுண்மியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு.
ஆனால், மக்கள் மீதுள்ள அக்கறையால் அவர்களை அந்த நோய்த்
தொற்றிலிருந்து விரைந்து மீட்டெடுத்த நாடு. அடுத்தவர் மீது பழியைப் போடாமல்,
வன்மம் பரப்பி மக்களை கூறுபோடாமல், அந்நாடு
கொரானா தீநுண்மியை எப்படி மீண்டது தெரியுமா? தென்கொரிய
மருத்துவமனைகள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் டாக்டர் லீ சொல்வதின் கருத்துப் பிழிவு
இதோ!
கொரானாவுக்கு
எதிராக 3 T கோட்பாடுகளை தென்கொரியா பின்பற்றியது.
அது என்ன 3 T?
1. Trace,
2. Test and
3. Treat
அதாவது
1. கண்டறி,
2. சோதனை செய் மற்றும்
3. சிகிச்சையளி.
இந்த கோட்பாட்டை
செயல்படுத்த தென்கொரியா நான்கு விதமான வழிமுறைகளை பின்பற்றியது.
1 கொரானா சம்பந்தமாக மக்களை அச்சுறுத்தாத எச்சரிக்கும் வெளிப்படைத்தன்மை
2 கொரானாவை கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலுமாய்
போராடுவதுமான தொடர் போராட்டம்
3 கொரானாவை கட்டுப்படுத்த Rapid Test Kits களை
ஆயுதங்களாய் பயன்படுத்துவது.
4 Rapid Test
Kits மூலமாக பாதிக்கப்பட்டவர் என்றில்லாமல் பகுதி தோறும் அதிவேகமான
மருத்துவ சோதனைகள் மேற்கொள்வது. (தென்கொரியாவில் ஒரு வாரத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற மருத்துவ தரவுகள் வியப்புக்குரியவை)
இந்த துரித
நடவடிக்கைகளால் தென்கொரியா கொரானா இறப்பை 1.4 விழுக்காடாக கட்டுப்படுத்திவிட்டது
அதாவது கொரானவுக்கு தென்கொரிய நாடு முழுக்க இறந்தவர்களின் எண்ணிக்கை 126 பேர் மட்டுமே!
இந்தியா
வல்லரசாகிறது, ஒளிர்கிறது என்றெல்லாம் வாய்சவடால்களில் ஒரு பிரதமர் உரையாடி கொண்டிருக்க,
தனது இயலாமைகளை
ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மீது திணித்து வெறுப்பு பரப்பி கொண்டிருக்க,
அவர்
சொல்வதற்கெல்லாம் ஆட மற்றொரு கூட்டம் காத்திருக்க
உலக நாடுகள்
தத்தமது நாட்டு மக்களை காக்க அக்கறையுடன், அவர்கள் மீதான பெரும் நேசத்துடன் போராடி
கொண்டிருக்கின்றன என்பதற்கு தென்கொரியா ஒரு சிறந்த உதாரணம்.
ஊரடங்கு மேலும்
நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது, மோடி சர்க்கார் கொரானாவுக்கு
எதிராய் முழு வீச்சில் செயல்பட போகிறாரா? அல்லது வழக்கமாய்
வகுப்புவாத பரப்புரைகளிலும், தற்பெருமைகளிலுமேயே காலத்தை
கடத்திவிடப் போகிறாரா என்பது கவலை அளிக்கிறது.
ஏனென்றால் கொரானா
தீநுண்மி முஸ்லிம்கள் போல பொறுமையுடன் அடங்கி இருக்காது. நீதி, நியமங்களை எதிர்நோக்கி
காத்திருக்காது. அது சமயங்களை, இனங்களை, வகுப்புவெறித் தனங்களைத் தாண்டி நாட்டு மக்கள் அனைவரையும் தீண்டக்கூடியது.
0 comments:
Post a Comment