சிறுவயது
முதற்கொண்டு எனது வாழ்க்கை என் வீட்டில் கழித்ததைவிட எனது இந்து சமய
சகோதர்களின் இல்லங்களில் கழித்ததுதான் அதிகம். இதை நான் எனது வைகறை
நினைவுகளில் நினைவு கூர்ந்தும் இருக்கிறேன்.
http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html ஒரு அடையாளத்துக்காகவேதான்
இந்த இந்து என்ற சொல் நான் பிரயோகித்ததும். ஏனென்றால், இந்து என்ற இந்தச்
சொல் எங்களை தனிமைப்படுத்திவிடும் என்ற கூச்சத்துடனேயே இதை
பிரயோகிக்கிறேன். ~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சகோதரி சத்திய பிரியா - Sathiya Priya, இந்த சகோதரி எனது ஒளிப்படங்களை விரும்பி ரசிப்பவர். தவறாமல் பின்னூட்டமிடுபவர். அப்படி பின்னூட்டமிடும்போதெல்லாம் ஏதோ எனது உறவினர் ஒருவரிடமிருந்து வந்த பின்னூட்டமாகவே எனது உள்ளம் அதை நினைக்கும்.
சத்திய பிரியா தனது வாழ்வில் பின்னி பிணைந்துள்ள அழகிய உறவுகள் சம்பந்தமாக நினைவு கூர்ந்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ஆக மிகச் சிறந்த வாழ்த்தாக இதை நான் கருதி மீள்பதிவு செய்கிறேன்.
அதற்கு முன்பாக,
எனது வாழ்வின் பெரும்பகுதி இரத்த உறவுகள், மனைவி வழியில் இந்து சமயத்தவராக இருப்பதால் அற்புதமான அந்த உறவுகளோடு மிகவும் இணக்கமாக என் வாழ்க்கை தொடர்கிறது என்ற பெருமையோடு நான் இருக்கிறேன். இந்த இணக்கத்துக்காக நாங்கள் ஏராளமான இழப்புகளை சந்தித்திருக்கிறோம் என்பது வேறு விஷயம்.
சிறுவயது முதற்கொண்டு எனது வாழ்க்கை என் வீட்டில் கழித்ததைவிட எனது இந்து சமய சகோதர்களின் இல்லங்களில் கழித்ததுதான் அதிகம். இதை நான் எனது வைகறை நினைவுகளில் நினைவு கூர்ந்தும் இருக்கிறேன். http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html ஒரு அடையாளத்துக்காகவேதான் இந்த இந்து என்ற சொல் நான் பிரயோகித்ததும். ஏனென்றால், இந்து என்ற இந்தச் சொல் எங்களை தனிமைப்படுத்திவிடும் என்ற கூச்சத்துடனேயே இதை பிரயோகிக்கிறேன்.
இதைத் தொடர்ந்து எனது எழுத்துக்கள், http://mazalaipiriyan.blogspot.in/2012/11/blog-post_28.html http://ikhwanameer.blogspot.in/2015/09/blog-post_14.html ஆவணப்படங்கள் https://www.youtube.com/watch?v=uykj1HfHw_o எல்லாமே ஒட்டியூடாடும் இந்த உறவுகளுடன்தான் இதுவரை தொடர்கிறது.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இனி சகோதரி சத்திய பிரியாவின் நினைவு கூர்தலும், வாழ்த்துக்களும்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
என் சிறு வயதில் ஒரு முஸ்லிம் குடும்பம் அருகில் குடியிருந்தோம்.
என் அம்மா அவர்களுடன் நட்புடன் ஆரம்பித்த உறவு என் அம்மாவை தன் மகளாக அவர்கள் நினைக்கும் அளவிற்கு வளர்ந்தது.
எங்கள் வீட்டில் அனைத்து நிகழ்ச்சிகளும் அவர்கள் இன்றி நடைபெறா! அவர்களுக்கு எமது சடங்கு சம்பிராதயங்கள் பற்றி தெரியாதபோதும் அதை தெரிந்துகொண்டு செய்வார்கள். தால்சா சுவை அங்குதான் ஆரம்பம் எனக்கு.
அந்த வீட்டு மருமகள்கள் , ஆம் எங்கள் நான்கு மாமிகளும் அவ்வளவு அழகு!!!!
மீண்டும் வீடு மாறியபோதும் அவ்வாறே அமைந்தது.
என் ஆகச்சிறந்த தோழி சுமையா பானு கிடைத்தாள்.
நான்,சுமையா, அழகு, இன்று வரை எங்கள் மூவரின் நட்பும் அழகாக தொடர்கிறது.
என் திருமண நாளில் என் கூடவே இருந்தாள்.
நான் ஊருக்கு கிளம்பும் வரை என்னை வந்து பார்த்து விட்டுத்தான் வேலைக்கு கிளம்புவாள் என் உயிர்த்தோழி சுமையா.
காலேஜ் சமயத்தில் எனக்குக் கிடைத்த நட்பு mehz ரொம்ப பிடித்த மரியாதையுடன் கூடிய நட்பு.
அதன் பிறகு நாங்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேறினோம். அங்கும் அவ்வாறே!!! பாப்பா அக்கா, ராசாத்தி அக்கா, ரஹ்மத் அக்கா, மும்தாஜ் அக்கா இன்னும் பலர்.
முக்கியமாக மும்தாஜ் அக்காவின் பிள்ளைகள் சாகுல். அலி. பானு அனைவரும் என் திருமணம்; என் தம்பி, தங்கை திருமணம், என் அப்பாவின் மறைவு எல்லாவற்றிருக்கும் எங்களுக்கு பக்கபலமாக இருப்பது அவர்கள் குடும்பமே! அதிகமாக phone பேசுவதில்லை இப்பொழுது. இருந்தாலும் பானுவும் அலியும் Msg செய்து கொண்டே இருப்பார்கள்.
”சத்யாம்மா நல்லாயிருக்கியாம்மா?” - என மும்தாஜ் அக்கா கேட்கும்போதே கண்களில் நீர் கோர்த்துவிடும்.
”நீங்க இருக்கணும்க்கா என் திருமணத்திற்கு” - என அலி சொல்லிக்கிட்டே இருப்பான்.
ஜுனில் வருவதாக சொன்னேன். நோன்பு நாட்கள் என்பதால் மே மாதம் வைத்துவிட்டார்கள். பானு என் பாசமிகு தங்கை.
இவ்வாறாக எங்கள் வாழ்கையில் இஸ்லாமியர்கள் பின்னிபிணைந்தே வந்திருக்கிறார்கள்.
சிங்கையிலும் nasi,Sadhu, zubi,aysha, seema,, என்று நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. Mdm. sheya sulong என் மகன் படித்த தொடக்கப்பள்ளியில் Office staff. இனிமையும் அன்பும் ஒரு சேர கலந்தவர்.
இவர்கள் வேண்டாம் என எங்கள் வாழ்க்கையை கடத்தி விட முடியாது.
இந்த பதிவை இந்த ரமலான் நாளில் பதிவு இடுவதே ஆகச்சிறந்ததாக நினைக்கிறேன்.
மேலும் என் முகநூல் நட்புகளுக்கும், இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்! நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லவே இல்லை... Gulam Mohideen sir, Ikhwan Ameer sir, Mr.Raja hai, அனைவருக்கும் வணக்கங்களும்… வாழ்த்துக்களும்.
Happy Hari Raya..
ReplyDeleteவாழ்க வளமுடன்.. தங்கள் குடும்பமும், சுற்றமும், நட்பும்...