ஏற்கனவே இருந்த லவ்-பேர்ட்ஸுடன் ஒரு ஜோடி “காக்டெயில்“ பறவைகளும், ஒரு ஜோடி புறக்களும் புதிதாக வந்து சேர்ந்தன.
தரைத்தளத்தில் நாட்டுக்கோழிகள் கூண்டுமுறையில் வளர்க்கப்பட்டு வந்தன.
இவற்றின் தீவனத்துக்காக, பயன்படுத்திய கோதுமை, கேழ்வரகு, திணையுடன் தற்போது புதிதாக கம்பு மற்றும் சூரியகாந்தி விதைகளும் சேர்ந்து கொண்டன.
சூரியகாந்தி விதைகள் விலை அதிகம். அதனால் ஒரு பரிட்சார்த்த முயற்சியாக மாடி தோட்டத்தில் நட்டுப் பார்த்ததில் 50-க்கும் குறையாத சூரியகாந்தி செடிகள் முளைத்து பூக்கத் தொடங்கின.
அதேபோல, ஒரு பிடி கம்பு தானியத்தை தொட்டிகளில் தூவியதில், அவை முளைவிட்டு வளர்ந்து கதிர்விட ஆரம்பித்தன.
இவை அனைத்தையும் எனது பள்ளி நாட்களில் ஆந்திராவில் வசித்துவந்த பாட்டியின் குக்கிராமத்தில் பார்த்த அனுபவம் தற்போது எனது மாடி தோட்டத்தில் நிஜமாக என் முன்னே..!
சந்தோஷம் தாளமுடியவில்லை!
பொழுதுவிடிந்ததும், சூரியகாந்தி மற்றும் கம்பு கதிர்களை பார்க்க மாடிக்கு ஓடுவேன்.
இந்த நேரத்தில் ஒரு நாள் சில இளம் கம்பு-கதிர்கள் பறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, பதறிப் போய் மனைவியிடம் விசாரிக்க.. அவருக்கும் குழப்பம்.
கம்பு கதிர்களுடன் மாடி தோட்டத்தில் அப்போதுதான் பிஞ்சு விட்டிருந்த மாதுளம் பழமும் பறிக்கப்பட்டிருந்தது.
கீழ் வீட்டில் புதிதாக வாடகைக்கு வந்திருப்போரின் குழந்தைகள் பறித்திருப்பார்களோ?
காக்கைகள் கொத்தியிருக்குமோ..?
குரங்குகளின் சேட்டையாக இருக்குமோ?
அண்டை வீட்டுப் பிள்ளைகள் பந்துவிளையாடும்போது, மாடியில் பந்து விழுந்து அதை எடுக்க வந்து அவர்கள் பறித்திருப்பார்களோ..?
இப்படி பல்வேறு கேள்விகள்... குழப்பங்களுடன் பொழுதுகள் கழிந்த ஒரு மதிய வேளை.
கம்பு தொட்டிக்கு அருகே ஏதோ நகர்வதைக் கண்டு பார்வையை உற்றுச் செலுத்தியபோதுதான் இந்த திருடன் கையும், களவுமாக பிடிபட்டான்.
இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை... படத்தில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..!
அருமை
ReplyDelete