NewsBlog

Thursday, July 16, 2020

நித்தம் வதைபடுவது யாரெனில்..

காலிலிருந்து பிறந்தவனோ..
காலால் உதைக்கிறீர்!
எப்போதும் ஒடுக்கப்பட்டவனோ..
அடித்து வதைக்கிறீர்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
இருவரையும் கொன்ற
அதே அதிகாரம்..
இதோ மத்தியபிரதேசத்தில்
மற்றொரு ரூபத்தில்..!

சோறு படைக்க நினைத்தது தவறோ
சேற்றில் இறங்கி உலகுக்கு
சோறு கிடைக்க நினைத்தது
கேடோ இங்கே!

தலைக்காய்ந்தவர்
வரிப்பணத்தில்
உயிர் வாழ்பவர்கள்
குண்டாந்தடி எடுத்து
அதிகார கொலைஞராய்
இதோ பார்த்தீரா இங்கே..!

இனி விசாரணைகள்
தொடரும்!
அதிகாரம் அரிதாரம்
பூசி நடிக்கும்!
மாண்பிழந்து போன
மனித உரிமைகளோ
இனி இழப்பதற்கு
ஒன்றுமில்லாமல்
நிர்வாணமாய் நிற்கும்!

மறதி நித்திரைக்குள்
ஜனநாயகம்
குறட்டை விடும்
கணபொழுதுக்குள்
அதோ அதிகார திமிர்
தடியை ஓங்கி
ஆர்ப்பரித்து நிற்கிறது
நாட்டின்
மற்றுமோர் மூலையில்
புதியதோர் பெயரில்..!

அந்தோ!
நித்தம் வதைபடுவது
ஒடுக்கப்படுபவன் மட்டுமே!
விண்ணதிர ஒலிப்பது
அவனது
அழுகை ஒலி மட்டுமே!

'''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''
Share:

1 comment:

  1. நீ அணைக்கவேண்டாம் எங்களை! அடிக்காமல் இருந்தாலே போதும். நீ அரசுக்கு அடிமை;நானோ உனக்கும் உன் இனத்திற்கும் சோறுபோடும் வள்ளல்.
    நினைத்தாயா? உன் வருமானம் என்பது என் போன்றோர் போடும் பிச்சை தான் என!

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive