”நானாஜீ, முதலமைச்சரம்மா அப்போலாவுலே எத்தனை நாள் இருந்தாங்க? – எனது பேரன் கேட்டான்.
”எழுபத்தைஞ்சு நாள் இருந்தாங்கப்பா.. ஏன் கேட்குறே..” – என்றேன் நான்.
”இல்ல.. அவங்கள சேர்த்திருந்த ஹாஸ்பிடல் ரொம்பவும் காஸ்ட்லியாச்சே.. அதான் கேட்டேன்..!” – என்றவன் சிறிது நேரம் கழித்து, ”நானாஜீ… ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாயிருக்கும்?” – என்றான் தொடர்ந்து.
”தெரியலேப்பா… அவங்களுக்கு ரொம்பவும் காஸ்ட்லியான மருத்துவத்தை, ஹை-டெக் தொழில்நுட்பத்தோடு கூடிய உபகரணங்களை வைச்சு.. உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள வச்சு… மருத்துவம் பார்த்தாங்க.. அப்படியும் பாவம்… அவங்கள காப்பாத்த முடியலியேப்பா..” – வருத்தப்பட்டேன் நான்.
”நானும் செய்திகள்லே கேட்டேன் நானாஜீ. அதான் கேட்குறேன். ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாயிருக்கும்..? சும்மா சொல்லுங்களேன்..!” – விடாப்பிடியாய் பேரன் நின்றான்.
”என்ன ஒரு நாளைக்கு சில ஆயிரங்களாவது இருக்கலாம். சில லட்சங்களாவது இருக்கலாம். எனக்கு தெரியாது கண்ணா..”
”இந்த ஆயிரங்களை.. லட்சங்களை… எழுபத்தைஞ்சு நாட்களோட பெருக்கினால்… பல லட்சங்கள்… பல கோடிகள் ஆகுமே.. இது யாரோட செலவு?” – அவன் சாதாரணமாகதான் கேட்டான்.
நான் திகைத்து நின்றேன்.
”எனக்கு தெரியாதப்பா.. அவங்க முதலமைச்சர் இல்லியா… அதனாலே கவர்மெண்ட் செலவு செய்திருக்கலாம். இல்லேன்னா.. அவங்களோட சொந்த செலவாக இருக்கலாம். கட்சி செலவிலும் இருக்கலாம். இல்லேன்னா… அந்த ஹாஸ்பிடலே செலவை ஏத்துட்டிருக்கலாம்..!” இப்படிதான் என்னாலே வரிசைப்படுத்த முடிந்தது.
இந்தக் காலத்து பிள்ளையல்லாவா அவன், “நான்- ஸ்டாப்பாக“ கேள்விகளை அடுக்கலானான்.
கவர்மெண்ட் என்பது நாமதான்..! கவர்மெண்ட் பணம் என்பதும் நமது பணம்தான்..! நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா.. இவ்வளவு பெரிய செலவை ஏத்துப்பாங்களா? அவங்க பணம்.. கட்சி பணம்னா.. இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? அந்த ஹாஸ்பிடலே செலவை ஏத்துட்டுச்சுன்னா நமக்கும் ஃபிரீயா அந்த ஹாஸ்பிடல் செலவை ஏத்துக்குமா?” சொல்லுங்க நானாஜீ.
நான் என்னத்த சொல்றது? குழந்தை… குழந்தைத்தனமான கேள்விகளை முன் வைக்குது.. நான் என்னத்த சொல்ல..? நமது அமைப்பிலுள்ள குளறுபடிகளை புரிந்து கொள்ளும் வயது அவனுக்கு இல்லை.
இதற்குள், ”டேய்.. எங்கடா போயிட்டே..?” எனது மகள் அழைக்க… ”இதோ.. வரேம்மா..!” பேரன் அங்கிருந்து ஓடினான்.
நல்ல வேளை பதில் சொல்வதிலிருந்து அப்போதைக்கு நான் தப்பித்தேன்.
நமக்கு இந்த நிலைமை வந்திருந்தா என்னவாகியிருக்கும்? எனது மனது கேட்க..
”ஆரம்பத்திலேயே தூக்கிவாரிப் போட்டிருப்பாங்க.. புதைச்ச இடத்துலே இந்நேரம் புல்லு முளைச்சிருக்கும்!”
- எனது மனசு தயங்காமல் பதில் சொன்னது.
அதேநேரம் அவன் அடுக்கடுக்காக வைத்த கேள்விகள் என்னுள்ளும் எழுவதை தடுக்க முடியவில்லையே நான் யாரிடம் சென்று கேட்க?
கேள்விகள் நிறைய... நானும் யாரிடம் கேட்க... உண்மை நாணும்
ReplyDeleteபலர் உள்ளங்களில் உள்ள கேள்விகள்தான்
ReplyDeleteலச்ச கணக்காண மக்களின் கேள்விகளும் இதே தான்
ReplyDelete