![]() |
அபிநவ் வர்மா |
அபிநவ் வர்மாவிடமிருந்து 42 லட்சம் போலி 2000 ரூபாய் நோட்டுக்களை பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. 30 சதவீத தரகு கட்டணம் பெற்று கொண்டு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2,000 ரூபாய் போலி நோட்டுக்களை வழங்கி கொண்டிருந்தபோது அபிநவ் வர்மா கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடன், அபிநவ் வர்மாவின் சகோதரி விஷாகா வர்மாவும், லூதியானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீட்டுமனை வியாபாரி சுமான் நாக்பாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அபிநவ் வர்மா பயன்படுத்திவந்த புத்தம் புதிய சொகுசு ஆடி காரில் இருந்து போலி 2,000 ரூபாய் நேட்டுக்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மிக முக்கிய அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் சிவப்பு சுழல் விளக்கு அந்த காரில் பொருத்தப்பட்டிருந்தது. இந்தத் தகல்வளை மொஹாலி போலிஸ் துணை கண்காணிப்பாளர் பார்மின்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.
அபிநவ் வர்மாவின் "லிவ் பிரைய்லி" என்னும் பெயர் கொண்ட சண்டிகர் அலுவலகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுபடுகிறது.
பஞ்சாபில் போலி புதிய ரூபாய் நோட்டுக்கள் பரவி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதில் தொடர்புடையோரை கைது செய்ய காவல்துறை மும்முரமாக சோதனைகளை நடத்திவருகிறது. இவற்றில் எல்லாம் அபிநவ் வர்மா தலைமையிலான இந்த கும்பல் தப்பித்து வந்தது. கடைசியில், நோட்டுக்களை மாற்றுவதில் தரகு தொகை பெற்ற பிறகும் போலியான நோட்டுக்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
கைது செய்யப்பட்டிருக்கும் அபிநவ் வர்மா, "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தன்னுடைய சிறந்த பணிக்கும், புதிய படைப்பாற்றலுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டை பெற்ற பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளான பார்வையற்றோர் பயன்படுத்தும் குச்சிகளில் பொருத்தப்படும் உணர்வலை கருவிகளை (சென்ஸார்) தயாரிக்கும் பொறியியல் பட்டதாரிதான் அபிநவ் வர்மா.
இந்நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பாதுகாப்பு சம்பந்தமான நம்பகத்தன்மை பொதுமக்களிடையே கேள்விக்குறியாகியுள்ளது.
0 comments:
Post a Comment