நீதித்துறையின் பளுவைக் குறைக்க மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்ணீர் விட்டு அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் 24.04.2016 அன்று நடந்தது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசும்போது, “நீதித்துறையின் வேலைப்பளு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 3 கோடி வழக்குகள் தேங்கி உள்ளன. தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் தொடர்பான வழக்கு காரணமாக நீதிபதிகளின் நியமனத்தில் தேக்கம் ஏற்பட்டது. இதனால், 434 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. வழக்குகளை முடிக்க முடியாமல் நீதித்துறை திணறி வருகிறது. நீதி கிடைக்காமல் விசாரணை நிலையிலேயே அப்பாவி மக்கள் சிறைகளில் வாடி வருகின்றனர். (இவ்வாறு பேசும்போது அவர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்). சிறைகள் நிரம்பி வழிகின்றன” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “நான் மத்திய அரசை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறையை குறை சொன்னால் மட்டும் போதாது. மொத்த பளுவையும் நீதித்துறை மீது சுமத்த கூடாது. தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் குறித்த உத்தரவு வெளியானபின், பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் நியமனத்தில் இன்னும் 169 நியமனங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இதை இன்னும் எத்தனை காலம்தான் நிலுவையில் வைப்பீர்கள்? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதிகள் இல்லாமல் எப்படி இந்த நிலையை சமாளிக்க முடியும்?
கடந்த 1987-ம் ஆண்டு சட்ட கமிஷன் பரிந்துரைப்படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அல்தமஸ் கபீர் தலைமை நீதிபதியாக இருந்தபோது, 2013-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுபற்றி கடிதம் எழுதினார். அவர் பதில் கடிதத்தில், மாநில அரசுகள்தான் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். மாநில அரசுகளைக் கேட்டால், மத்திய அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்கின்றன. அமெரிக்காவில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆண்டுக்கு 81 வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறது. இந்தியாவில் நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்து, இவ்வளவு நெருக்கடியில் எப்படி பணியாற்றுகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்கின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய தூணாக உள்ள நீதித் துறையை காப்பாற்ற வேண்டிய நேரம் இது” என்று கூறினார். அவரது அரைமணி நேர பேச்சில் பலமுறை உருக்கமாக கண்ணீர் சிந்தினார்.
இன்னும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.
இவை எல்லாம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள். உலுத்துப் போன நீதித்துறைக் குறித்து நீதிபதிகளின் வாக்குமூலங்கள்.
நீதிக்கு இலக்கணமாக திகழும் நபிகளாருக்கு ஏற்பட்ட இக்கட்டான அனுபவம் இது:

"இறைவனின் தூதரே, இவர் எனது பேரீச்சம் பழத்தோட்டத்தை எடுத்துக் கொண்டார். அதை நீங்கள்தான் எனக்கு மீட்டுத் தர வேண்டும்.!" - கண்களில் கண்ணீர் பொங்க அழுதவாறு வந்தான் ஓர் அநாதைச் சிறுவன்.
"அழாதே மகனே.. வா..வா.. வந்து இப்படி உட்கார்.
யார் உனது தோட்டத்தைப் பறித்துக் கொண்டார்கள்?
என்ன நடந்தது என்று இப்போது விவரமாக சொல்!" - சிறுவனை அருகில் இருத்திக் கொண்ட நபிகளார், அவன் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டார்கள்.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரிடமும் விசாரித்தார்கள்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நபிகளார் அநாதைச் சிறுவனுக்கு சாதகமாக நியாயம் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்கள்.
கடைசியில் தீர்ப்பு அநாதைச் சிறுவனுக்கு எதிராக அமைந்தது.
முடிவைக் கேட்ட சிறுவன் "ஓ..!" வென்று அழ ஆரம்பித்தான்.
இதைக் கண்டு நபிகளார் மிகவும் வேதனைப்பட்டார்கள். அன்னாரது கண்கள் கலங்கிவிட்டன.
"சகோதரரே, உங்கள் வாதத்தில் நியாயம் இருந்தது. அதன்படி தோட்டம் உங்களுடையதுதான்!
ஆனால். பாவம்.. இந்தச் சிறுவனைப் பாருங்கள். அதுவும் யாருமில்லாத அநாதைச் சிறுவன். அதனால் தோட்டத்தை இவனுக்கே கொடுத்துவிடுங்கள். இதற்குப் பதிலாக உங்களுக்கு இறைவன் மறுமையில் சொர்க்கத்தில் ஒரு தோட்டத்தை அளிப்பான்!"
நபிகளாரின் வேண்டுகோளை தோட்டக்காரர் ஏற்கவில்லை.
அங்கு குழுமியிருந்தோரில் நபித்தோழர் 'அப்வாலித் ஹத்தாவும்' ஒருவர். நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தவர், தோட்டக்காரரை தனியே அழைத்துச் சென்றார். சொன்னார்: "சகோதரரே, தோட்டத்தை இந்த அநாதைச் சிறுவனுக்கு கொடுத்துவிடுங்கள். இதற்கு பதிலாக நான் எனது தோட்டங்களில் மிகச் சிறந்த தோட்டமொன்றை தங்களுக்குத் தந்துவிடுகின்றேன்! தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்!"
தனது தோட்டத்தைவிட அப்வாலித் ஹத்தாவின் தோட்டம் செழிப்பானது! குலை குலையாக உயர் ரக பேரீச்சம் பழங்களைத் தரக்கூடியது. இதனால், வழக்கைக் கொண்டு வந்தவர் நபித்தோழரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
நபித்தோழர் அப்வாலித் ஹத்தாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நபிகளாரிடம் சென்றவர், "இறைவனின் தூதரே, எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?"- என்றார் பணிவோடு.
"தாராளமாகக் கேளுங்கள் ஹத்தாஹ், என்ன சந்தேகம்?"- என்றார் நபிகளார் புன்னகையுடன்.
"ஒன்றுமில்லை இறைவனின் தூதரே, அநாதைச் சிறுவனுக்கு தரும்படி தாங்கள் கேட்டீர்களே தோட்டம்.. அதை நான் இம்மையில் வாங்கித் தருகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்குப் பதிலாக மறுமையில் எனக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்குமா இறைவனின் தூதரே?"
கண்களில் மகிழ்ச்சி பொங்க நபிகளார் சொன்னார்கள்: "நிச்சயம்.. நிச்சயமாக கிடைக்கும் ஹத்தா! நிச்சயமாக உமக்கும் ஒரு தோட்டம் சுவனத்தில் கிடைக்கும்!"
"அப்படியென்றால்.. இறைவனின் தூதரே, என் தோட்டத்தைக் கொடுத்துவிட்டு, இவரது தோட்டத்தை நான் வாங்கி அதை அநாதைச் சிறுவனிடம் கொடுத்துவிடுகின்றேன். இந்தச் செயலுக்கு தாங்களே சாட்சி!" - என்றார் நபித்தோழர் அப்வாலித் ஹத்தா (இறையருள் பொழிவதாக!)
நபி பெருமானார் தமது தோழரைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.
"அநாதைகளைப் பற்றி உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறுவீராக: "அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல்முறையை மேற்கொள்வதே உத்தமமாகும்!"
- என்ற திருக்குர்ஆனின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நபிகளார் அநாதைச் சிறுவனை அழைத்தார்கள். அன்போடு அவனை அணைத்துக் கொண்டார்கள்.
ஒரு அநாதைச் சிறுவனுக்கு நன்மை பயக்கக் கூடிய செயல்முறையை நிறைவேற்றிய திருப்தி நபிகளார் முகத்தில் நிலவியது.
தோட்டம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அநாதைச் சிறுவனும் சிரித்தான்.
- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

2.. நற்குணங்களை
நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!: http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம்: http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்: http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html

16 உதவி
சிறிது. பதவி பெரிது: http://ikhwanameer.blogspot.in/2016/01/16.html
17 தலைக்கு
மேல் பறந்த தாய்க்குருவி: http://ikhwanameer.blogspot.in/2016/04/17.html
0 comments:
Post a Comment