ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன் என்று அந்த வேதநூலுக்கு சான்றாய் நான் முழங்கி நின்றேன்.
அடுத்ததாக, தமிழகமெங்கும் திருக்குர்ஆனை கொண்டு சேர்க்கும் பணி ஆரம்பித்தது.
சென்னை எண்ணூரிலிருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள பழவேற்காட்டை மையமாக வைத்து சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தை அறிமுகம் செய்வது என்று தீர்மானமானது.
பழவேற்காடு தேர்ந்தெடுத்ததற்கு காரணமிருந்தது. இந்தியாவில் இஸ்லாம் பரிச்சயமான கடற்கரை கிராமங்களில் பழவேற்காடும் ஒன்று. அங்கு அரபுநாட்டைச் சேர்ந்த பூர்வீக குடிகள் வசிக்கிறார்கள். இத்துடன் முஸ்லிம்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். மேலும், ஜமீலாபாத் என்று புதிதாக மீனவமக்கள் இஸ்லாத்தை தழுவிய கிராமம் ஒன்றும் அங்கு உண்டு.
இவற்றையெல்லாம் சாதகமாக வைத்துதான் திருக்குர்ஆன் பிரதிகளை கொண்டு சென்றதும்.
பழவேற்காட்டின் அரபு பூர்வீக குடிகள் வாழும் பகுதியில் பெரிய பள்ளி, சிறிய பள்ளி என்று இரண்டு பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளியின் இமாம்களை சந்தித்து திருக்குர்ஆனை காட்டியதும் அவர்கள் அவ்வளவாக அக்கறைக் காட்டவில்லை. அந்தப் பணியைப் பற்றி விருப்பமில்லை என்பது அவர்களின் முக சாடையிலிருந்தே தெரிந்தது.
தொழுகைக்குபின், அங்கிருந்து அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இரண்டு பள்ளிகளிலும் இத்தகைய நிலைதான் ஏற்பட்டது.
அங்கிருந்து கிளம்பி நேராக ஜமீலாபாத்துக்கு சென்றால்… இந்த தகவல் அங்கு காட்டுத்தீயாக ஏற்கனவே பரவிவிட்டிருந்தது.
பழவேற்காடுக்கு வடக்கே அமைந்துள்ள கால்வாய் நீரில் நடந்து சென்றுதான் ஜமீலாபாத்தை அடைய வேண்டும்.
ஏதோ அந்நியராய் பார்த்தார்கள்.
முதல் முறையாக வாழ்க்கையில் லேசான பதட்டம் தொற்றிக் கொண்ட இடமது.
தொழுகைக்கு பிறகு அந்தப் பகுதியில் எந்தக் காரணம் கொண்டும் தங்கியிருக்கக் கூடாதென்றும், யாரையும் சந்திக்கக்கூடாதென்றும் எழுதப்படாத கட்டளையாக ஜமீலாபாத்வாசிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். அவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தல். கல்வியறிவும் அவ்வளவாக இல்லாதவர்கள். உழைப்பியலின் கடினம் போலவே அவர்களின் மனங்களும் கடினப்பட்டிருந்தன.
எடுத்துச் சென்ற திருக்குர்ஆன் பிரதிகளை மீண்டும் சுமந்துகொண்டு நானும் நண்பர் அப்துற் றஹீமும் நடக்க, ஊர் எல்லைவரை பின்தொடர்ந்து வந்து எங்களை வெளியேற்றினார்கள்.
இது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும்.
தற்போது, வாரத்தில் ஓரிருமுறை, காட்டுயிர் ஆய்வுக்காகவும், ஒளிப்படங்களை எடுக்கவும், செய்தி ஆவணப்படங்களைத் தயாரிக்கவும் பழவேற்காடுக்கு செல்லும்போதெல்லாம் இந்த சம்பவம் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.
06.06.2015 அன்று, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பழவேற்காடு ஜமீலாபாத்துக்கு ஒட்டிய கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சங்கத் தலைவர் சுபாஷ் வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும், ஜமீலாபாத்துக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. உள்ளுக்குள் ஒரு தயக்கமும் இருந்தது. இத்தனைக்கும் தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, பாதிக்கப்பட்ட ஜமீலாபாத்வாசிகளுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிவாரணக்குழு படகுகள், வலைகள் போன்றவற்றை வழங்கி சமூக தொண்டாற்றியிருந்தது. இருப்பினும் உள்ளுக்குள் எழுந்த ஒருவிதமான சங்கடத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.
கடைசியில், ஒரு பத்திரிகையாளனாக ஜமீலாபாத்தில் நுழைந்தேன்.
சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. புதிய பள்ளிவாசல் எழும்பியிருந்தது. ஆனால், வாழ்க்கைத்தரத்தில், மக்களின் மனோநிலையில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
மதிய தொழுகையை (லுஹர்) தொழுதுவிட்டு, பக்கத்திலிருந்த படகுதுறைக்கு சென்று படங்களை எடுத்தேன்.
ஊருக்கு வெளியே எல்லையில் சற்று நேரம் வாகனத்தை நிறுத்தினேன். ஜமீலாபாத்தை திரும்பிப் பார்த்தேன். எனது மனக்கண்ணில் தாயிப் நகரும், அருமை நபிகளாரின் புனித உடலிலிருந்து உதிர்ந்த உதிரமும் நினைவில் எழுந்தன.
“ஓ..! ஜமீலாபாத்! நீயும் சாட்சியாக இருப்பாய்! இந்த எளியவனின் பணியில்!” - என்று முணுமுணுத்தவாறு புறப்பட்டேன்.
இறைவன் நாடினால்… அடுத்த வைகறை நினைவுகளில்..
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23: மர்யம் ஏன் அழுதாள்?: http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24: வேட்டைக்காரன்: http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25: லென்ஸ் விழி வழியே..: http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27: ஈந்து கசிந்த மனம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html
வைகறை நினைவுகள் பகுதி 28: நான் புரிந்துகொண்ட இஸ்லாம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/28.html
வைகறை நினைவுகள்: 29 காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக…!: http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html
0 comments:
Post a Comment