ஆன்மிகம், மனிதனுள் புதைந்திருக்கும் உயரிய மனித விழுமியங்களை ஒளிரச் செய்யும் ஒரு வாழ்வியல் தேட்டம். அக, புற வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு சாதனம். படைத்தவனோடு மனித உள்ளங்களை இணைக்கும் ஒரு பாலம். கொள்ளையனான ரத்னாகரனை, வால்மீகியாய் பண்படுத்தி உயரிய இதிகாச நாயகனாய் ராமனை படைத்துக் காட்ட வைத்த ஒரு வித்தை அது.
அதிலும், இந்திய நாட்டின் தொன்றுதொட்டுவரும் ஆன்மிக தொன்ம மரபுகள்தான் இந்தியர்களின் உலகளாவிய அடையாளங்கள். இந்திய சமூக அமைப்பில், நல்லிணக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் உருவாக்கி உயரிய மனிதர்களாக உலகில் இந்தியர்களை அடையாளப்படுத்தியது ஆன்மிகம்தான் என்றால் அது மிகையல்ல.
மனித உள்ளங்களில், வாழ்க்கைக் குறித்த விரக்தியும், நிராசையும் ஏற்படும் போது, அமைதியையும், சீரான வாழ்வியல் போக்கையும் தரவல்ல ஒரு பாசறையாக ஆன்மிகம் இருப்பதால்தான் மேற்கத்தியர்கள் எல்லாம் அமைதி தேடி ஆன்மிகத் தலைவர்களான சாமியார்களை தஞ்சமடைகிறார்கள்.
போதிக்கும் சொல் வடிவங்கள் எல்லாம் செயல்களாய் வாழ்வில் பரிணமிக்க வேண்டிய இத்தகைய ஆன்மிக தலைவர்களின் சுய ரூபங்கள் துரதிஷ்டவசமாக சில நேரங்களில் வெளிப்பட்டு அவர்கள் போலியானவர்களோ என்று பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது, வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பினர் திட்டமிட்டிருந்த ஓர் ஆன்மிக கலாசார மாநாடு நீதிமன்ற வழக்கினால் சிக்கல்களைச் சந்தித்துள்ளது. இந்த ஆன்மிக மாநாட்டை ரூ.5 கோடி அபராதம் செலுத்தி நடத்திக் கொள்ளலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதம் தொடர்பாக, சிறை சென்றாலும் செல்வோமே தவிர ஒரு பைசாகூட அபராதமாக செலுத்த மாட்டோம் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
யமுனை நதிக்கரையில் வாழும் கலை அமைப்பினர் நடத்தும் உலகக் கலாசாரத் திருவிழா தொடர்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அக்கறைகளில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அந்த அமைப்புக்கு ரூ.5 கோடி முதற்கட்ட அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதனை நிகழ்ச்சிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு, யமுனை நதி நீரில் மனித கழிவு நொதிமங்களை (என்சைம்) மிதக்க விடக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில், ரவிசங்கர் கூறும்போது, “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. சிறை செல்லவும் தயார். ஆனால் ஒரு பைசா கூட அபராதமாகச் செலுத்த மாட்டோம்!” - என்றும் தெரிவித்திருக்கிறார். "இந்த உலகக் கலாசாரா மாநாடு கலாச்சார ஒலிம்பிக்ஸ் போன்றது. பொதுவாக இத்தகைய நிகழ்வுகள் வரவேற்கப்பட வேண்டும். லட்சக்கணக்கானோர் வரும் ஒரு நிகழ்வு எப்படி தனியார் நிகழ்வாகும்? இதுவே கும்பமேளாவாக இருந்தால் ராணுவம் பயன்படுத்தப்பட்டிருக்காதா?” - என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஆன்மிகத் தலைவர் ரவிசங்கர்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் யமுனை நதிக்கரையில் உலக கலாச்சார விழா தொடங்குவது சம்பந்தமாக யமுனை நதிச்சமவெளியில் பல நூறு ஏக்கர் பரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடைகள், நதி மீது தற்காலிக மிதக்கும் பாலங்கள் என பிரம்மாண்ட ஏற்பாடுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என எழுந்த புகாரில் உண்மைகள் இல்லாமல் இல்லை.
நதியில் விடப்படவுள்ள மனித கழிவுகள், மிதக்கும் பால கட்டுமானத்துக்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது, கூட்ட நெரிசலால் துயரம் ஏற்படக் கூடும் என்ற டெல்லி காவல் துறையின் எச்சரிக்கை போன்ற வற்றால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்பதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ரத்து செய்தார்.

நிகழ்ச்சிக்கு தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு, பசுமைத் தீர்ப்பாய தலைவர் ஸ்வந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. இவ்வழக்கு விசாரணையின் முடிவாக, பசுமைத் தீர்ப்பாய அமர்வு, “நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக ரூ.5 கோடியை வாழும் கலை அமைப்பு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டது.
மேலும், “மனித கழிவுகளை டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி நதியில் விடக்கூடாது, சுற்றுச்சூழலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் ஒட்டுமொத்த பகுதியையும் பல்லுயிர்ச்சூழல் பூங்காவாக 'வாழும் கலை அமைப்பு' மாற்ற வேண்டும்” - என உத்தரவிட்டது. முறையாக செயல் படாததற்காக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழுவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளை பசுமைத் தீர்ப்பாயம் கடும் கேள்விகளால் துளைத்தெடுத்தது.
விசாரணையின்போது, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம், “இவ்விழா தொடர்பாக எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை. இதுதொடர்பான விண்ணப்பம் எதுவும் நிலுவையில் இல்லை” - என கூறி நழுவியது.
ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், யமுனை நீர்ச் சமவெளிப் பகுதியில் தற்காலிக கட்டுமானங்களுக்கு எவ்வித சுற்றுச்சூழல் அனுமதியும் பெறத் தேவையில்லை என தன் பிரமாணப் பத்திரத்தில் கூறியது.
சுமார் 35 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு துயர சம்பவங்கள் நிகழக்கூடும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பிரதமர் பங்கேற்கும் மேடையை தனியாக அமைக்க வலியுறுத்தி மத்திய பொதுப் பணித்துறை கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
முன்னதாக, நடந்த வழக்கு விசாரணையின்போது, 'தற்காலிக மிதவைப் பாலங்கள் அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது?' - என டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் ஆன்மிக மாநாடு யமுனை நதிக்கு மாபெரும் சூழல் பாதிப்பை, இழப்பை உருவாக்கிவிடும். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமேயில்லை. ஏனென்றால், யமுனை நதி தினமும் படுமோசமான பாதிப்புக்கும், மீட்கவியலாத இழப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் இடம் தில்லி பெருநகரம். தில்லியின் ஊடாக சுமார் 20 கி.மீ. தொலைவு கடந்து செல்லும் யமுனை நதி, அதன் பாதையில் வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு மாசடைகிறது.
கடந்த பத்து ஆண்டுகளாக தொழில்துறைக் கழிவுகளால் யமுனை படுமோசமாக மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. யமுனையில் கலக்கும் தொழில்துறைக் கழிவுகளின் அளவு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்கும் அளவைக் காட்டிலும் 13 மடங்கு அதிகமாக உள்ளன.

தில்லியின் புறநகர் பகுதிக்குள் நுழையும் யமுனை நதியின் நீரில் ஒரு லிட்டரில் 7.5 மில்லி கிராம் ஆக்ஸிஜன் உள்ளது. ஆனால், சூழல் மாசுவால், தில்லியை விட்டு வெளியேறும்போது ஒரு லிட்டரில் 1.3 மில்லி கிராம் ஆக்ஸிஜன் என்று குறைந்து போகிறது. தில்லியை விட்டு வெளியேறிய பிறகு அதில் கலக்கும் கிளை நதிகளால்தான் யமுனை மீண்டும் உயிர் பெறுகிறது என்பது முக்கியமானது.
தில்லியில் உள்ள வீடுகளில் 55% முதல் 60% மட்டுமே புதைச் சாக்கடைத் திட்டத்தில் உள்ளன. இவையும் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்கிற புகார் ஒருபுறம் இருக்க, தில்லி நகருக்குள்ளிருந்து புறப்படும் 18 வாய்க்கால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீர் யமுனையில்தான் கலக்கிறது. இந்தக் கழிவுநீர்க் கலப்பால் யமுனை மாசுபடுவதைத் தடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வளவு களேபரம் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், வாழும் கலையின் மூன்று நாள் ஆன்மிக மாநாட்டினால் யமுனை பாழ்படும். மீட்கவியலாத இழப்பை யமுனை சந்திக்கும். வெள்ளப்படுகையில் வரக்கூடிய பறவைகள் வேறு இடமின்றி திண்டாடும். என்று சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது உண்மையான அக்கறையால் எழுந்த கவலைகள் என்றே சொல்லமுடியும்.
ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், இத்தனை அக்கிரமங்களையும் இத்தனை ஆண்டுகளாக யமுனை தாங்கிக்கொண்டிருக்கிறது. இது போதாதென்று தற்போது, மூன்று நாளில் லட்சக்கணக்கான மக்களால் எத்தகைய கேட்டினை யமுனை அடையும் என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
வாழும் கலை அமைப்பு தனது 35-ஆவது ஆண்டு விழாவை உலக கலாசார விழாவாக நடத்த முற்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், மனித வாழ்வை சீர்க்குலைக்க உதவும் ஆன்மிக மாநாடுகளை எப்படி பொருத்தக் கொள்ள முடியும்? இந்த மாநாட்டுக்கு 35 லட்சம் பேர் வருகைத் தரவிருக்கிறார்கள் என்று அந்த அமைப்பினர் அறிவித்தது பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பலத்த அச்சத்தை உருவாக்கியது.
அத்துடன், குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மத்திய - மாநில அமைச்சர்கள் வருவிருப்பதாக தில்லியின் பல பகுதிகளிலும் பெரிய பிளக்ஸ் பேனர்களையும் வாழும் கலை அமைப்பு வைத்து தடபுடலாக விளம்பரப்படுத்தியது.
மனிதனை எளிமைப்படுத்தி, அவனுக்கு இம்மையின் நிலையாமை உணர்த்தி வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆன்மிகம் பன்னாட்டு நிறுவனங்கள் போல வணிகமயமாகிவிட்டதே உண்மை. இதில் வாழும் கலை அமைப்பும் சர்வதேச அளவில் ஆன்மிக வணிகமயமாகலின் முயற்சியாக மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.5 கோடி அபராதம் தொடர்பாக, சிறை சென்றாலும் செல்வோமே தவிர ஒரு பைசாகூட செலுத்த மாட்டோம் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு கட்டுப்படமாட்டோம் என்றுதான் இதற்கு பொருள். சொந்த நாட்டு சட்டங்களை மதிக்காத ஒரு ஆன்மிகத் தலைவரிடம் எத்தகைய வழிகாட்டுதல்களை அதன் ஆதரவாளர்கள் பெற முடியும் என்று பலத்த கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.
சொல்லும், செயலும் முரண்படாத வாழ்வியலே, ஆன்மிக தேடல்களின் அடிப்படை. அதற்கான தகுதியை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இழந்துவிட்டார் என்பதே அவர் தந்துள்ள வாக்குமூலத்தின் விரிவு.

0 comments:
Post a Comment