ஊதுலையிலிருந்து தீப்பிழம்பாய் வெளிவந்துக் கொண்டிருந்த இரும்பின் மீது சம்மட்டியின் அடி விழுந்து கொண்டிருந்தது. காய்ச்சப்பட்ட இரும்பை கொரடால் மாற்றி.. மாற்றி வைத்து தேவையான வடிவமைப்புக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார் கருப்பச்சாமி.
”ஆஹ்.. அல்லாஹ்!..!”
”என்ன ஹஜரத்..? என்ன ஆச்சு?” – பதறி எழுந்த கருப்பச்சாமி சம்மட்டி அடித்துக் கொண்டிருந்த ஹஜரத்தை நெருங்கினார்.
”ஒண்ணுமில்லே..! இரும்பிலிருந்து சின்னதா பிசிறு தெரிச்சு கன்னத்தைத் தாக்கிடுச்சு. நல்லவேளை கண்ணில் விழாமல் இறைவன் காப்பாத்திட்டான். “எல்லாப்புகழும் இறைவனுக்கே!”
”நான் அப்பவே சொன்னேன் ஹஜரத், இந்த வேலை வேண்டாம் உங்களுக்குன்னு. பள்ளிவாசல்லேயே கொஞ்சம் வளைஞ்சு கொடுத்துட்டு பொறுமைய்யா இருந்திருக்கலாம்!”
பிசிறுப்பட்ட இடத்தை தடவிக் கொண்டே ஹஜரத், ”என்னை நல்லா புரிஞ்சுகிட்ட நீங்களா இப்படிப் பேசறது? இல்லே.. முடியாது என்னாலே மார்க்கத்துக்கு புறம்பான காரியங்களை நிச்சயமாய் செய்ய முடியாது. அதனால், என்ன இழப்பு, கஷ்டம் வந்தாலும் சரி. உங்களுக்கு நான் தொல்லையாயிருந்தா சொல்லுங்க.. இருக்கவே இருக்கு.. மாடசாமி அண்ணாச்சி ரிக்ஷா!”
”அய்யய்யோ..! என்ன ஹஜரத் இப்படி சொல்லிட்டீங்க.. மிருகமா அறியாமையிலே வாழ்ந்திட்டிருந்த என்னை மனிதனாக பண்படுத்தியது உங்களுடைய தொடர்புதான். நீங்க எனக்குக் தொல்லையாய் இருக்க முடியுமா? மார்க்கத்தை போதிக்க வேண்டிய நீங்க இப்படி உலைகளத்திலே கஷ்டப்படுறதைப் பார்க்க மனசு கேட்காமத்தான் அப்படிச் சொன்னேன்!”
கருப்பச்சாமி ஹஜரத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
”சரி.. சரி.. வாங்க தம்பி..! இரும்பு குளிர்ந்திடப் போவுது!” – ஹஜரத் மீண்டும் சம்மட்டியை கையிலெத்துக் கொண்டு இரும்பின் மீது அடித்தார்.
”ணங்..! ணங்..!” – சுதி தவறாமல் சம்மட்டி அடி இரும்பின் மீது விழுந்து இசையெழுப்ப ஹஜரத்தின் மனம் இறந்த காலத்தில் நுழைந்தது.
ஜும்ஆ தொழுகைக்காக பள்ளி புத்துணர்ச்சிப் பெற்றிருந்தது. மஹல்லாவாசிகளில் பெரும்பான்மையோர் அணி அணியாக தொழுகைக்காக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
பள்ளியினுள் ஹஜரத் பயான் – சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
”சகோதரர்களே! இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியின், தீனின் அடிப்படை இதுதான். இந்த பூமியின் உரிமையாளன், படைப்பினங்களின் அதிபதி, மனிதர்களின் அரசன் இறைவனேயாவான். எனவே அவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ வேண்டும். இறைவன் நமக்களித்த ஷரீஅத் என்ற வாழ்க்கைமுறையை நம்முடைய வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். நமக்குள் உண்டாகும் பிரச்னைகளில், சண்டைச்சச்சரவுகளில், கொடுக்கல் – வாங்கல்களில் அதன் அடிப்படையிலேயெ தீர்வுகள் காண வேண்டும்.
நாட்டு நிர்வாகமும், ஆளுவோரும் இறைவனின் சட்டதிட்டங்களின்படியே அரசாள வேண்டும். இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும். வேறு எந்த தலைவருக்கும், இஸங்களுக்கும் அடிமையாகாமல் உலக முஸ்லிம்களின், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி வாழ வேண்டும்!”
ஹஜரத் சத்தியத்தை பறை சாற்றிக் கொண்டிருக்க மக்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால், ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த, ஜும்ஆவில் மட்டுமே தொழுகைக்காக பள்ளிவாசலை எட்டிப் பார்க்கும் பள்ளி நிர்வாகிகளான தாவூத் மற்றும் ஜப்பார் பாய்களின் முகங்களில் தீப்பூக்கள் மலர்ந்து சிவந்து கொண்டிருந்ததை ஹஜரத் கவனிக்கவில்லை.
தொழுகை முடிந்தது.
”ஹஜரத்..! ஹஜரத்..! இப்படி வாங்க..!” – ஜும்ஆ முடிந்து தொழ வந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருக்க பள்ளியின் செயலாளரான தாவூத்தும், தலைவரான ஜப்பாரும் ஹஜரத்தை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றனர்.
”வாங்க.. உட்காருங்க..!” – ஹஜரத் தாவூத்தையும், ஜப்பாரையும் வரவேற்று அமரவைத்தார். ”என்ன விஷயம்?” – சொல்லுங்க என்று கேட்டார்.
”ஹஜரத்.. என்ன இன்னைக்கு பயானிலே இப்படி பேசிட்டீங்க?” – தாவூத்தின் குரலில் உஷ்ணம் ஏறியது.
”ஆமாம்.. தாவூத் பாய்.. நேரம் போதலே..! இன்னும் விரிவாக பேசியிருக்கலாம்.. சரி அடுத்த வாரம் பாா்த்துக்கலாம்!” – ஹஜரத் சகஜமாக சொன்னார்.
”என்ன இன்னும் விரிவாகவா?”
”ஆமாம் பாய்..! தௌஹீதை - ஓரிறைக் கொள்கையை அதன் பல்வேறு அம்சங்களை இன்னும் மக்களுக்கு விரிவாக விளக்கியிருக்கலாம்”
”ஹஜரத்.. கொஞ்சம் நாளா.. உங்க போக்கு சரியில்லே!”
”எந்த போக்கு தாவூத் பாய்? எனக்கு புரியலே. கொஞ்சம் விளக்கமாய் சொன்னா நல்லது” – ஹஜரத் கேட்டார்.
”எல்லாம்தான்! ஜும்ஆவிலே ஏதாவது கதைகளை பயான் செய்றதை விட்டுட்டு.. என்னமோ.. தீன்.. தீன்னு.. இந்த நவீன உலகத்துலே மறுபடியும் மதத்தின்படி நடக்கிறதுக்கு மக்களை தூண்டிவிடுறது நல்லாயில்லே..!
மதரஸா பசங்களுக்கு ஓத கத்துக் கொடுங்கன்னா ஏதோ குர்ஆன் விளக்கமெல்லாம் சொல்லித் தர்ரீங்களாமே! பெண்களுக்கும் பயான் செய்யணும், அவங்களையும் ஜும்ஆ தொழுகைக்கு வசதியாய் ஒரு கொட்டாய் கட்டச் சொன்னீங்களாமே! ம்.. என்ன இதெல்லாம்..?”
”ஆமாம்.. உண்மைதான்! சொன்னேன்.. இருங்க.. முதல்லே ஒரு திருத்தம்.. இஸ்லாம் மதம் கிடையாது. அது ஒரு மார்க்கம். மனிதர்கள் பின்பற்றி வாழ இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்க்கை நெறி.
குழந்தைகளுக்கு பொருள் தொியாமல் ஓதக்கொடுத்து என்ன பயன்? அதனாலே அவங்களுக்கு புரியும்படி பொருளோடு சின்ன சின்ன உதாரணங்களோடு சொல்லித் தர்ரேன்!
பெண்களுக்கும் தீன் தேவைதானே! அவங்க அடுப்படியிலே மட்டும் வெந்துக் கிடக்க நாயகம் நமக்குக் கற்றுத் தரலியே! நாளைய சமுதாயத்தை உருவாக்கப் போற அவங்களுக்கும் மார்க்கப் போதனை அவசியம்தானே? இதிலே என்ன பாய் தப்பிருக்கு?” – ஹஜரத் விளக்கினார்.
”இதோ..! பாருங்க ஹஜரத்.. நாங்க சொல்றதை நல்லா கவனிச்சுகுங்க.. இங்கே பள்ளியிலே உங்க பயானையெல்லாம் மூட்டைக் கட்டி தூர வச்சிட்டு… கிஸ்ஸாக்களை மட்டும் நிறைய சொல்லணும். பசங்களுக்கு வெறும் அரபி மட்டும் ஓதிக் கொடுங்க போதும். பெண்களுக்கு அது வேணும்… இது வேணும்னு உளறிட்டிருக்காம பிழைப்பை நடத்திற வழியைப் பாருங்க. இல்லேன்னா…. வேலையை இழக்க வேண்டியிருக்கும்.. ஜாக்கிரத்தை..!”
தாவூத்தின் மிரட்டலுக்கு ஜப்பாரும் தலையாட்டினார்.
சிறிது நேரம் மௌனமாய் இருந்த ஹஜரத், ”ஜப்பார் பாய்.. தாவூத் பாய்.. ஆலிம்களை - அறிஞர்களை மிரட்டி உங்க மன இச்சைப்படி நடக்கச் சொல்ற இடத்துலே என்னாலே நிச்சயம் இருக்க முடியாது! அதனாலே நான் பள்ளியைவிட்டு போறேன்” – என்றார் திட்டவட்டமாக.
”வேலையை விட்டு போவப் போறீங்களா? சரியான ஆளாயிருப்பீங்க போலிக்கே! இந்தக் காலத்துலே நீங்க சொல்றதெல்லாம் எங்கே எடுபடும் ஹஜரத்? சரி…! அது உங்க இஷ்டம். இருந்தாலும் உங்க மேலே தனிப்பட்ட முறையிலே மதிப்பும், மரியாதையும் இருப்பதாலே… உங்களுக்கு ஒரு வாரம் தவணைத் தர்ரோம்! அதுவரை மோதினார் தொழ வைப்பார். வெளியே போய் நல்லா சிந்தியுங்க. ஒரு வாரத்துக்குள்ளே நீங்க எப்ப வேணுமானாலும் வேலையிலே நாங்க சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு வந்து சேர்ந்துக்கலாம். நல்லா யோசிச்சு முடிவெடுங்க. வாங்க.. ஜப்பார்.. போகலாம்!” இருவரும் கிளம்பினர்.
”ஹஜரத்..! ஹஜரத்..! என்ன பலமான யோசனை? இந்தாங்க டீ குடிங்க..”
கருப்பச்சாமியின் குரலில் சுயநினைவை அடைந்த ஹஜரத்தின் சிந்தனை தடைப்பட்டது.
சூடான டீயிலிருந்து ஆவி கிளம்பிக் கொண்டிருந்தது. ஸ்டூலில் அமர்ந்திருந்த ஹஜரத் எதிரே தரையில் அமா்ந்து டீயைப் பருகிக் கொண்டிருந்த கருப்பச்சாமியைப் பார்த்தார்.
கருத்த, பருத்த உடல். உருண்டை விழிகள். உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத குழந்தை உள்ளம். மழிக்கப்படாத முகம், உள்ளத்தின் மாறுதல்களை, நாயகத்தின் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
பள்ளிவாசலில் அந்திநேரத் தொழுகையான மக்ரீப் வேளையில் மந்தரித்துக் கொள்ள வந்த கருப்பாச்சாமியோடு உண்டான சிநேகிதத்தின் இறுக்கத்தில் மெல்ல.. மெல்ல ஏகத்துவத்தை விளக்கியது. அதனால், நபிமார்கள் அடைந்த துயரங்களைக் கேட்டு, விழிகள் நனைய தலைகுனிந்து விம்மியது. சத்தியத்தின் அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராகி அறியாமைக் கால பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல துறந்து கொண்டிருந்தது. பெரும் மன மாற்றம் கருப்பச்சாமிக்குள் நிகழ்ந்து கொண்டிருந்ததை ஹஜரத் கவனித்துக் கொண்டிருந்தார்.
”அல்ஹம்துலில்லாஹ்!” – ஹஜரத் கொஞ்சம் சத்தமாகவே இறைவனைப் புகழ்ந்துரைத்தார்.
”என்ன ஹஜரத்? இறைவனைப் புகழுறீங்க?”
”ஒண்ணுமிலே தம்பி..! கடந்தகாலம் நினைவுக்கு வந்தது அதுதான்!” – ஹஜரத் மென்மையாக சிரித்தார்.
”என்கொரு சந்தேகம். கோபப்படாம பதில் சொல்றீங்களா ஹஜரத்?”
”கோபமா? உங்களிடமா? என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? நீங்க எதை வேண்டுமானாலும் தாராளமாய் கேட்கலாம். கேளுங்க..”
”பெரிசாய் ஒண்ணுமில்லே! நபிகள் நாயகம் மக்காவிலே எத்தனை வருஷம் போதனைச் செஞ்சாங்க ஹஜரத்?”
ஹஜரத் சிரித்தவாறு, “பதிமூணு வருஷக்காலம்” – என்றார்.
”ஹஜரத்.. நான் கேட்பதற்கு பொறுமையாய் பதில் சொல்றதா வாக்கு கொடுத்திருக்கீங்க. அதனாலே நான் கேட்கிறதுக்கெல்லாம் பதில் சொல்லணும்”
”ஒண்ணும் பயப்படாம கேளுங்க தம்பி..”
”இறைதூதுவத்திற்கு முன்னே நபிகளாருக்கும், மக்காவாசிகளுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது?”
”அல் அமீன் – நம்பிக்கைக்குரியவர், அஸ்ஸாதிக் – உண்மைப்படுத்துபவர், இன்னும் கண்ணியமிக்கவர்! என்றெல்லாம் மக்கள் நாயகத்தை சிறப்பித்து அழைச்சாங்க!”
”இந்த சிறப்பெல்லாம் பின்னாளிலே ஏன் மாறிடுச்சு?”
கருப்பச்சாமியின் கேள்விகளில் அழுத்தம் அதிகமிருந்ததை உணர்ந்த ஹஜரத் உரையாடலில் மிகவும் கவனம் செலுத்தினார். சொன்னார் – ”இறைவனின் தூதர் மக்களை ஓர் இறைக் கொள்கையின் பக்கம் அழைச்சாங்க. பழைய பழக்க வழக்கங்களிலிருந்தெல்லாம் வெளிவரச் சொன்னாங்க. இறைவனுக்கு அஞ்சி நல்லவர்களாக வாழ அறிவுறுத்தினாங்க…”
குறுக்கிட்ட கருப்பச்சாமி, ”இன்னும் மனுஷங்க நல்லவங்களாக நல்ல விஷயங்களை எல்லாம் சொன்னாங்க. அதனாலே எதிர்ப்பு வந்திடுச்சு.. இல்லையா ஹஜரத்?” – என்றார்.
”சரியாய் சொன்னீங்க தம்பி. இதனாலே, சொந்த நாடே அந்நியமாய் போய் சொல்ல முடியாத அளவுக்கு துன்பத்துயரங்களையெல்லாம் அன்பு நபி அனுபவிச்சாங்க” – ஹஜரத்தின் குரல் கம்மி கரகரத்தது.
”பிறகு?”
”பிறகென்ன? பதிமூணு வருஷக்காலம் பொறுத்திருந்த இறைவனின் திருத்தூதர் இறைவனின் கட்டளைப்படியே மக்காவைத் துறந்து மதீனாவுக்கு சென்றாங்க தம்பி!”
”அப்போ.. உண்மையை எடுத்துரைக்க நாயகம் பதிமூணு வருஷம் மக்காவிலே பல்வேறு துன்பங்களை அனுபவிச்சாங்க. சொல்லடியோட.. கல்லடியும் பட்டாங்க சரிதானே ஹஜரத்?”
கருப்பச்சாமி பதிமூன்று வருடங்களை சற்று அழுத்திச் சொன்னார்.
ஹஜரத் நிமிர்ந்து உட்கார்ந்தார். கருப்பச்சாமியையே உற்று நோக்கினார். ஏதோ புரிவதும், புரியாததுமாய் மனதில் அலைபாய்ந்தது.
”ஆமாம்.. தம்பி..!” – என்று முணுமுணுக்கவும் செய்தார்.
”உண்மைக்கு எப்போதும் எதிர்ப்பு உண்டு என்று நபிகளாரின் வரலாறே சொல்லுது. அவற்றையெல்லாம் சமாளித்து நபிகளார் பதிமூணு வருஷம் மக்காவிலே தாக்குப் பிடிச்சிட்டு அவங்க பணியிலேயே கவனமாக இருந்தாங்க”
கருப்பச்சாமி… சொல்ல சொல்ல ஹஜரத்தின் புலன்கள் கூர்மையடைந்தன.
”சரி ஹஜரத்.. நீங்க எத்தனை வருஷம் எதிர்ப்புகளையெல்லாம் சமாளிச்சீங்க?”
கருப்பச்சாமியின் அந்த ஒற்றைவரி கேள்வி ஹஜரத்தின் நெஞ்சைத் துளைத்தது.
”இப்போ.. நான் உங்களை நேரிடையாகவே கேட்குறேன்.. மூச்சுக்கு மூச்சு இறைவேதம், நபிமொழி என்று முழங்கும் நீங்க இந்த விஷயத்துலே மட்டும் எப்படி பலவீனமடைஞ்சு போனீங்க? பள்ளியிலே நீங்க சொல்றதை கேட்கிறதுக்கு எத்தனையோ பேர் ரொம்ப தொலைவிலேயிருந்தெல்லாம் வர்ராங்க. இவங்களையெல்லாம் புறக்கணிச்சு இரண்டு, மூணு பேருடைய பேச்சை கேட்டு, அவங்க எதிர்ப்பைக் கண்டு போகப் போறீங்க. நாயகம் நின்னு மக்களுக்கு போதிச்ச இடத்தை துறக்கப் போறீங்க.
நபிகளாரின் வரலாற்றை வரிக்கு வரி நினைச்சுப் பாருங்க ஹஜரத். இதெல்லாம் நீங்க எனக்குக் கொடுத்த புத்தகங்களைப் படிச்சு நான் தெரிஞ்சுகிட்டவை.
நீங்க பள்ளியைவிட்டு போயிட்டா அடுத்த ஹஜரத் வருவார். அவர் அந்த நிர்வாகிகள் சொல்றதுக்கு வளைஞ்சு கொடுத்து பிழைப்பை ஓட்டுவார். உங்க பணி தடைப்பட்டுபோனதுதான் மிச்சம்.
அதனாலே இந்த தம்பி சொல்றதை தயவுசெஞ்சு கேளுங்க. இன்னும் பள்ளிவாசல் நிரா்வாகிங்க கொடுத்த தவணை முடியலே. அதனாலே மறுபடியும் அந்த பொறுப்பைத் தொடருங்க. பொறுமையாய் திட்டம் போட்டு.. இதோ இந்த இரும்பை நாம மெது மெதுவாய் தட்டி உருமாற்றுவதைப் போல திட்டம் போட்டு உங்க வேலையைச் செய்யுங்க. ஓய்வு நேரத்தை மக்கள் மத்தியிலே செலவிடுங்க. மெல்ல மெல்ல நீங்க சொல்ல நினைக்கிறதை சொல்லுங்க.. மக்கள் மனசை மார்க்கம் பக்கம் திருப்புங்க..”
அந்த பாமரனின் உள்ளத்திலிருந்து அழகிய வழிகாட்டுதல் அறிவொளியாய் பாய்ந்து கொண்டிருந்தது.
ஹஜரத் எழுந்தார். கருப்பாச்சாமியை நோக்கி மெல்ல நடந்தார். இறுகக் கட்டித் தழுவிக் கொண்டார். இருவரின் வாயிலிருந்தும் ஒருசேர ”அல்ஹம்துலில்லாஹ்!” உதிர்ந்தது.
ஹஜரத்தின் கண்கள் சூட்கேசைத் துழாவ கருப்பாச்சாமி அதை உள்ளறையிலிருந்து எடுத்து வந்து பவ்வியமாக நீட்டினார்.
பள்ளிவாசலில் ஹஜரத் அறையின் பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறந்தன. அவரின் மனக்கதவுகளும்தான்!
சமரசம் மாதமிருமுறை இதழில் மார்ச் 1-15, 1987 அன்று பிரசுரமான எனது சிறுகதை.

““““““““““““““““““““““““““““““““““““

““““““““““““““““““““
சமரசம் மாதமிருமுறை இதழில் மார்ச் 1-15, 1987 அன்று பிரசுரமான எனது சிறுகதை.
0 comments:
Post a Comment