"காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டு!
கடலிலிருந்து மீனவர்களை விரட்டு!
பெருநகர்களிலிருந்து குடிசைவாழ் மக்களை விரட்டு!
டெல்டாவிலிருந்து விவசாயிகளை விரட்டு!
சிறுநகரங்களிலிருந்து சிறுதொழில் சிறுவணிகரை விரட்டு!
மாநிலங்களிலிருந்து மண்ணின் மக்களை விரட்டு!
ஊர்தோறும் சேரிமக்களை ஓடஓட விரட்டு!
காட்டைக் கொளுத்து! கடலை நஞ்சாக்கு!
பூமியின் மறுபுறம் வரை துளையிடு!
வாயு, கரி, எண்ணெய் என எதையும் விடாதே!
அரசுடைமை அனைத்தையும் கார்ப்பரேட் உடைமையாக்கு!
பேச்சுரிமை பறி! எழுத்துரிமை பறி!
வாழ்வுரிமை பறி! போராட்ட உரிமை பறி!
ஜாதிவெறிக்கு சாம்பிராணி போடு!
மதவெறிக்கு ஊதுபத்தி கொளுத்து!
நாட்டையே கொள்ளையிடு! அதை வளர்ச்சி என்று சொல்!
காவிகள், கார்ப்பேட்டுகளின் கால்களை நக்கிக்குடி!
அதை "தேசபக்தி" என்று சொல்!
எதிர்த்துக் கேட்போரை இல்லாமல் ஆக்கு!
தீவிரவாதி, நக்சலைட் என்று பரப்பு!
ஊடகம் யாவையும் உண்மைக்கு ஊமையாக்கு!
உனக்கு மட்டும் ஊது குழலாக்கு!
எல்லா அக்கிரமங்களையும் சட்டப்படி செய்!
சட்டம் இல்லையெனில் புதுச்சட்டம் போடு!
அக்கிரமம் வளர்!
உன் ஃபாசிசக் கொடுமை தாளாமல் ஒப்பாரி
மரண ஓலமிடும் மக்கள் கூக்குரல்
உலகுக்குக் கேட்காமல் இருக்க
ஓவென்ற...
விமானப் பேரிரைச்சலையும் தாண்டி...
இன்னும் அதிகமாய்
வெறிப்பிடித்த மிருகம்போல்
கும்பலாகக் கத்து
#பாரத்_மாதாகீ_ஜெய் என்று...!"
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
- முனைவர் ஜீவா
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இந்த பதிவு இனிய நண்பர் Bhaskarraja Rengarajan-ன் பின்னூட்டத் திலிருந்து எடுத்து கையாளப் பட்டுள்ளது. நன்றி பாஸ்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''






0 comments:
Post a Comment