"மனசோட மடல்கள்…
எனது
வாழ்வில்
நான்
சந்தித்த
பல்வேறு
வகையான
மனிதர்களுடனான
எனது
கருத்து
பறிமாற்றங்கள்
மடல்களாய்.
நிராசை
விளிம்பிலும்,
கோபத்தின்
குமைச்சலிலும்,
விரக்தியின்
படுபாதாளத்திலும்
பல்வேறு
வினாக்களுடன்
நின்றிருந்த
ஆண்,
பெண்
நிஜங்கள்.
அவர்களுடன்
மனம்
விட்டு
பேசும்
மடல்கள்
இவை.
அவர்களை
நம்பிக்கையூட்டி
விலகியிருந்த
பாதையில்
சீராக
பயணிக்க
என்னாலான
முயற்சி.
கடந்த
காலத்தின்
பதிவுகள்.
உள்ளது
உள்ளப்படி
அப்படியே.
உங்களுக்குப்
பிடித்திருந்தால்..
நீங்களும்
மடல்களை
வாசிக்கலாம்.
கருத்துக்களை
ஏற்றுக்கொள்ளலாம்
அல்லது
மறுக்கலாம்"
--- இக்வான்
அமீர்
பாசத்துக்கும்,
பிரியத்துக்கும் உரிய சகோதரிக்கு,
இறைவனின்
சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!
அஸ்ஸலாமு
அலைக்கும்,
உன்னை
இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லுணர்வுகளுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இரு கரமேந்தி நெஞ்சுருக இறைஞ்சுகின்றேன்.
சமீபத்தில்,
An Innocent Man’ என்ற
ஆங்கில நாவலை வாசித்தேன். அதன் கதைச் சுருக்கம் இதுதான்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்ணியமான
குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் விமான நிலைய பழுது பார்க்கும் தளத்தில் அதிகாரியாகப் பணிபுரிபவன். தான் உண்டு. தன் வேலை உண்டு. தன் குடும்பம் உண்டு என்று தன் இளம் மனைவியுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருபவன்.
இந்நிலையில்,
ஒருநாள். கதாநாயகன் வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருக்கின்றான். திடீரென்று பாய்ந்துவரும் “போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவனைச் சுட்டு படுகாயப்படுத்துகிறார்கள். பிறகு வீடு முழுவதும் சோதனையிடுகிறார்கள். போதைப் பொருள் ஏதும் சிக்கவில்லை. அப்பாவி மனிதன் சுடப்பட்டதற்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்பதால் அவன்தான் தங்களைச் சுட்டதாக சாட்சிகளை ஜோடித்து நீதிமன்றத்தில் அவனுக்குத் தண்டனையையும் வாங்கி தந்துவிடுகிறார்கள்.
உண்மையில்
இந்த காவல்துறை அதிகாரிகள் ஊழல் பேர்வழிகள். பிடிபடும் போதைப் பொருளை முழுவதையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல், அதை விற்று லாபம் சம்பாதிப்பவர்கள்.
சிறையில்
அடைபட்டிருக்கும் அப்பாவி கதாநாயகன், அங்கே பல கொடுமைகளை, “தாதா“க்களின் அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து காலம் தள்ளுகின்றான். இடையில், கதாநாயகி காவலைதுறையினரின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து தனது கணவன் நிரபராதி என்றும், அந்த காவல்துறை அதிகாரிகள்தான் ஊழல் பேர்வழிகள் என்றும் பல முறை முறையிட்டும்,
அழுது புலம்பியும் பலனில்லாமல் போகிறது.
சிறையில்
தோழனாய் கிடைத்த ஓர் அறிவாளி கைதியின் தோழமையாலும், அறிவுறுத்தலாலும் தன்னைத் துன்புறுத்தி இம்சிக்கும் தாதா கைதியை கழிப்பறையில் சாட்சிகள் இல்லாமலேயே கொன்றுவிடுகின்றான்.
அதன்பின்,
தண்டனை முடிந்து வெளிவரும் கதாநாயகன் தன்னை பொய்க்குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தருவதே நாவலின் முடிவாகும்.
சகோதரி,
இந்த நாவலில் நமக்கு படிப்பினை உள்ளதாலேயே இந்த சந்தர்பத்தில் இதை உனக்கும் நினைவுறுத்துகின்றேன். சில
சமயங்களில் சாட்சியங்கள் என்ற முலாம் பூச்சால், பொய்மையும், உண்மையாகிவிடுகிறது. இது பௌதீயியல் அடிப்படையிலான மனித சட்டங்களில் உள்ள குறைபாடுகளாகும். இந்த பொய்ச் சாட்சியங்களை உரசிப்பார்க்கும் திறனின்மை நமது நீதிமன்றங்களின் பலவீனங்களாகும். வேறு வழியில்லாமல் நீதிபதிகள் தங்கள் இயலாமையால் அளிக்கும் தீர்ப்பால் குற்றவாளிகள் நிரபராதிவிடுகிறார்கள். நிரபராதிகளோ குற்றம் சாட்டப்பட்டு தண்டனையும் பெறுகிறார்கள்.
ஆனால்,
மனித மனமோ ஒரு பரிபூரண நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு
செயலும், அது மறைவானதோ, வெளிப்படையானதோ எதுவானாலும், வெளிச்சத்தில் நடந்தாலும், காரிருளில் நடந்தாலும் அனைத்தையும் அறிந்து தீர்ப்பளிக்கும் ஒரு நீதிபதியின் தேவையை உணர்கிறது. அத்தகைய நீதிபரிபாலனம், நீதமான சட்டத்தின் அரசாட்சி நடக்கும் இடம் எதுவென்று தெரியுமா உனக்கு?
இதோ…
திருக்குர்ஆன் சொல்வதைக் கொஞ்சம் செவி தாழ்த்தி கேளேன்:
”பூமி
முழு பலத்துடன் உலுக்கப்படும்போது, மேலும், பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொண்ர்ந்து விடும்போது, மேலும் அதற்கு என்ன நேர்ந்தது?“ – என்று மனிதன் கேட்கும்போது, அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும். ஏனெனில், உம் இறைவன் அதற்கு அவ்வாறு எடுத்துரைக்கும்படி ஆணையிட்டிருப்பான். அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள். தங்கள் செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக..! பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ, அவன் அதனைக் கண்டுக் கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுக் கொள்வான். (99:1-8)
“வானம்
மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் இறைவன் நன்கு அறிகின்றான். அவை அனைத்தும் ஓர் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன” 22:70)
”அவர்களுடைய
நெஞ்சங்கள் மறைந்திருக்கின்றவற்றையும்,
அவை வெளிப்படுத்துகின்றவற்றையும்
நிச்சயமாக இறைவன் நன்கறிகின்றான். வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை..!” (27:75)
வானங்களிலும்,
பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் இறைவன் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா என்ன? மூன்று மனிதர்களிடையே இரகசியப் பேச்சு வார்த்தை எதுவும் நடப்பதில்லை. அவர்களிடையே நான்காவதாக இறைவன் இருந்ததைத் தவிர! (58:7)
எனதருமைச்
சகோதரியே, கேட்டாயா இறைவனின் வார்த்தைகளை..! இறைவனின் ஞானம் அளப்பரியது! கற்பனைக்கு எட்டாதது..!
மனிதனின்
அத்தனைச் செயல்களும் பதிவு செய்யப்படுகின்றன. துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன. அதனால், இறைவினன் நீதிமன்றத்தில் அணுவளவும் வழுவாத நீதி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இத்தகைய
பேராற்றல் மிக்க இறைவனைத்தான் இறைவனின் அடிமைகளாகிய நாம் நம்முடைய இறைவனாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதாக உறுதி பிரமாணத்தில் (கலிமாவில்) வாக்களிக்கின்றோம். அது ஒரு பொறுப்பை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு அதற்காக செய்யப்படும் முயற்சியாகும் என்பதை நினைவில் வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
இறைவனின்
வார்த்தைகளையும், அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்துவிடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை!‘ என்ற திருக்குர்ஆனின் (72:23) வசனத்தை உன் முன் நிறுத்தி விடை பெறுகின்றேன். வஸ்ஸலாம்.
உன்
இம்மை, மறுமை நலனை் நாடும்
உன்
அண்ணன்
இக்வான்
அமீர்.
““““““““““““““““““““
0 comments:
Post a Comment