NewsBlog

Wednesday, May 31, 2017

முதன்மையானது ... மாடா? நாடா?



இந்நிலையில் மோடி சர்க்காரின் பாஜக அரசு இந்திய சமூகத்தின் ஒரு பகுதி மக்களை மனதில் நினைத்து அவர்களை பழிவாங்குவதாக தப்புக் கணக்கு போட்டு எடுத்த முட்டாள் தனமான முடிவு உண்மையில் ஒட்டு மொத்த தேசத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய தொடுத்த யுத்தமாகும். இந்திய அரசியல் அமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் தந்துள்ள அடிப்படை உரிமையை மனு சட்டங்களின் அடிப்படையில் பறிக்கும் முடிவாகும். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

125 கோடி மக்கள் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்,  வேதகாலம் தொட்டே மாட்டிறைச்சி உண்பது சமய நம்பிக்கையுடன் கலந்த ஒன்று என்று வேத, இதிகாசங்களின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமயக்கருத்துகளுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.

மாடுகளின் உடலிருந்து வெறும் 30 விழுக்காடு பகுதி மட்டுமே இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அதன் 70 விழுக்காடு பகுதி அதாவது மாட்டு கொம்புகள், வால், தோல், ரத்தம், எலும்புகள் இவை அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு வணிக சந்தையில் லட்சக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டித் தருகின்றன. 

உதாரணமாக நமது நாட்டின் 125 கோடி பேரும் ஏதோ ஒருவகையில் சர்க்கரையை பயன்படுத்தியே ஆக வேண்டியுள்ளது. மாட்டின் எலும்புத்தூள் கலக்காமல் சர்க்கரை உற்பத்தி இல்லை. சோப்பு, பற்பசை போன்ற முக்கிய தயாரிப்புகளிலும் மாட்டின் எலும்புத் தூள் பயன்படுத்தப்படுகிறது.

நமது காவல்துறையும், ராணுவமும் பயன்படுத்தும் காலணிகளும், பெல்ட்டுகளும் மாட்டுத் தோலிலிருந்து தயாரிக்கப்படுபவை. மாட்டுத் தோலிலிருந்து கிடைக்கும் ஜெலடின் என்ற பொருளிலின் தூள் உணவு பொருட்களிலும், மாத்திரைகளின் மேல் பூச்சுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மாட்டின் ரத்தம் டானிக்குகளும், ஷு பாலிஷும் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

மாட்டு வால் முடியிலிருந்து பிரஷ்களும், டஸ்டர்களும் தயாரிக்கப்படுகின்றன.

மாட்டின் குடற்பகுதியைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக்கான நூல், பாட்மிட்டன் ராக்கெட் இழைகள், இசைக்கருவிகளுக்கான நாண்களும் தயாரிக்கப்படுகின்றன.

மாட்டு சுரப்பிகளிலிருந்து இன்சுலின் போன்ற முக்கிய மருத்துவப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாட்டு கொழுப்பிலிருந்து பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் இந்தியா இரண்டாவது இடம் வகித்து கோடிக்கணக்கான வருவாயை ஈட்டித் தரும் நிலையில் இனி இறைச்சி ஏற்றுமதியும் தடை செய்யப்படும்.

இப்படி மாடு மறைமுகமாய் அன்றாடம் நமது முக்கிய உணவுப் பொருட்களின் பயன்படாகவும், பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாகவும் உள்ளது.

இந்நிலையில் மோடி சர்க்காரின் பாஜக அரசு இந்திய சமூகத்தின் ஒரு பகுதி மக்களை மனதில் நினைத்து அவர்களை பழிவாங்குவதாக தப்புக் கணக்கு போட்டு எடுத்த முட்டாள் தனமான முடிவு உண்மையில் ஒட்டு மொத்த தேசத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய தொடுத்த யுத்தமாகும். இந்திய அரசியல் அமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் தந்துள்ள அடிப்படை உரிமையை மனு சட்டங்களின் அடிப்படையில் பறிக்கும் முடிவாகும்.

இனி நாம் அடிப்படையான உணவுப் பொருட்களை பயன்படுத்த முடியாது.

நமது காவல்துறையும், ராணுவமும் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட காலணிகளையும், பெல்ட்டுகளையும் அணிய முடியாது.

முக்கிய மருந்து பொருட்களையும், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டி வரும். 

அதனால், ஒட்டு மொத்த நாட்டின் பிரச்னையை சிறுபான்மையினர் தங்கள் பிரச்னையாக முடிவெடுத்துக் கொண்டு தெருவில் இறங்க வேண்டிய அவசியமில்லை. பதட்டப்பட வேண்டியதுமில்லை. இறைச்சி என்பது உணவு பொருள் மட்டுமே. இதிலும் ஏராளமான சலுகைகள் (ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று என்று) வழிகாட்டப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகம் உலகளாவிய சமூகமாகையால், தியாகத் திருநாள் போன்ற நாட்களை எண்ணி கலங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உலகின் எந்தப் பகுதி முஸ்லிம்களிடமும் தனது பங்குக்கான குர்பானியை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவையும், அதன் அமைப்பையும் சீர்கெடுக்க பதவியேற்றிருக்கும் பாசிசவாதிகளை விரட்டியடிப்பதற்கான வழிமுறைகளை காண பொது சமூகத்துடன் கரம் கோர்த்து இணைந்து செயல்பட வேண்டிய தருணமிது.

நம் முன்னோர்களின் அரும், பெரும் தியாகத்தால் கிடைத்த இந்திய விடுதலை பறிபோய் நாடு மீண்டும் அடிமைப்படாமல் காப்பதே மாட்டை விட மிக முக்கியமான பொறுப்பு என்பதை உணர வேண்டிய காலமிது.


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive