வாடிய பயிர் கண்டு வாடியவர் வள்ளலார் பெருமானார். வாடிய உயிர்களைக் கண்டு வாடியதோடு மட்டுமில்லாமல் அவற்றின் வாட்டம் போக்க வழிமுறைக் கண்டவர் நபிகள் பெருமானார்.
சக உயிர்களுக்கு செய்யும் உதவியானது.. பெரும் பதவிகளைப் பெற்றுத் தரும் என்று அழுத்தம் திருத்தமாக போதித்தவர் அன்பு நபி.
நண்பர்களே, இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்..!' இரண்டு அற்புதமான சம்பவங்களைக் காட்டி தமது தோழர்களை சக உயிர்களிடம் இரக்கம் கொள்ளச் சொல்கிறார்கள் நபி பெருமானார். இத்தொடரின் இன்றைய பகுதியையும் வழக்கம் போல, உங்களது முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு எத்தி வைப்பதுதான் உங்களது பங்களிப்பு!
ஓர் ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அப்பூனைக்குக் கிழவி சரியாக உணவளிப்பதில்லை; நீரும் அளிப்பதில்லை. பூனையைக் கட்டிப் போட்டு அதை வருத்தி வந்தாள். இந்நிலையில் அவள் மரணமடைந்துவிட்டாள். அவளது செயலுக்காக அவள் நரகம் சென்றாள்.
பாலைவனம்.
உச்சிவேளையில் ஒரு மனிதன் நடந்து வந்தான். தீய்க்கும் வெய்யிலால் நீர்த்தாகம் அவனை வாட்டியது.
பாலையில் ஒரு கிணறு இருந்தது. அதில் இறங்கிய வழிப்போக்கன் போதிய மட்டும் நீர் அருந்தினான்.
கிணற்றுக்கு வெளியே தாகத்தால் ஒரு நாய் தவித்துக் கொண்டிருந்தது. கிணற்றைச் சுற்றி இருந்த ஈர மணலை தாகம் தாங்காமல் அது நக்கியது.
இதைக் கண்ட மனிதனின் உள்ளத்தில் இரக்கம் சுரந்தது. திரும்பவும் கிணற்றில் வழிப்போக்கன் இறங்கினான். தன் தோல் காலுறையில் நீர் மொண்டான். அதை பல்லில் கடித்து சிரமத்துடன் மேலே கொணர்ந்தான். தாகம் தீர நாய்க்கு உதவினான். இவனது செயலைக் கண்ட இறைவன் அவனுக்குச் சொர்க்கம் தந்தான்.
'உயிர்களிடம் இரங்குதல் வேண்டும்!' - என்பது சம்பந்தமாக முஹம்மது நபிகளார் (ஸல்) போதனை செய்யும்போது தம் தோழர்க்கு சொன்ன சம்பவங்கள் இவை.
சிறிய செயல்களானாலும் அவற்றின் முக்கியத்துவத்தையும், செயல் துடிப்பையும் வைத்து இறைவனிடம் அவை உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றன.
- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:
1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை.. : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!: http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம்: http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்: http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html