NewsBlog

Tuesday, April 23, 2019

மாட்டு அரசியலும், மனிதாபிமானமும்




 மாலை சுமார் ஆறுமணியிருக்கும்.

பறந்து திரியும் பறவைகளை அடைக்கும் நேரம் அது.

நாங்கள் (நானும், பேரப்பிள்ளைகளும்) சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த குரல் கேட்டது:

“மாடு… கன்னு போட்டிருக்கு… மாடு… கன்னு போட்டிருக்கு!” மாடியிலிருந்து எட்டிப் பார்த்தால் காங்கேயம் சைஸீக்கு எங்கள் வீட்டு வாசலுக்கு நேராக ஒரு பசு மாடும் அதன் கன்றும் இருந்தது..

வீடே பரபரப்பானது. நடுத் தெருவில் இருந்த கன்றை ஓரமாக ஒதுக்கப் போனால்.. தாய் மாடு முட்ட வந்தது.

நாய்கள் நடமாட்டம் வேறு.

ஒரு குட்டிப் பயல் நாயை விரட்ட இன்னொரு பேரப்பையன் ரிஸ்க்கை ரஸ்காக நினைத்து துணிந்து கன்றை தெரு ஓரமாக பாதுகாப்பாக ஒரு சிமெண்ட் மேடை மீது படுக்க வைக்க

இன்னொருவனோ கஞ்சித் தண்ணீரை தேடிப் பிடித்து கொண்டு வந்து பசு மாட்டின் முன் வைக்க

- என்று வீடே பரபரப்பானது.

பசு மாடு மற்றும் அதன் கன்று ஆகியவற்றின் பாதுகாப்பைக் கருதி மற்ற இரண்டு பிள்ளைகள் மாடு வளர்ப்போரை தேடிச் சென்று, அலைந்து திரிந்து

அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து தகவல் சொல்ல என்று இந்த சம்பவம் நீண்டது.

இதில் எந்தவிதமான மாட்டு அரசியலும் இல்லை.

எங்கள் வீட்டு நண்டு சிண்டுகள் எல்லாம் பதறியதற்கு காரணம் மனிதாபினமானம் அன்றி வேறில்லை.

ஒட்டகத்தின் கண்ணீருக்கும் காரணம் தேடிய http://ikhwanameer.blogspot.com/2015/11/blog-post_26.html ஒரு போதனையாளரின் பின்பற்றலின் மகத்துவம் அது.

ஆனால், மாடுகளுக்காக என்ற போர்வையில் மனிதர்களைக் கொல்லும் கயமைத்தன அரசியல் அல்ல இது.

இந்த நிகழ்வின் டெய்ல் பீஸாக தேடிப்பிடித்து விசாரித்து தகவல் சொன்னபோதுதான் தெரிந்தது அந்த கறவை பசு மாட்டின் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்று!

நல்லவேளை இந்த மண் பெரியார் தேசமாகையால் எல்லாம் சுபத்திலேயே முடிந்தது.

Share:

2 comments:

  1. மனம் நிறைந்தது இக்வான் ஐயா .அந்த பெரிய மனம் நல்லுள்ளம் கொண்ட சின்னஞ் சிறார்களுக்கு இறை ஆசீர்வாதம் கிட்டட்டும் .

    தாய் சேய் படம் கொள்ளை அழகு .

    Angel.

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive