எல்லா நதியிலும் தண்ணீர் இருந்தாலும், ஒவ்வொரு நதியின் குணமும் வேறுபட்டது. ஒரே மாதிரி ஒழுங்கு நடவடிக்கைகளை எல்லா நதிகளுக்கும் பொருந்தாது. 44 நதிகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகள் என்னென்ன என்று முறைப்படி வரிசைப்படுத்தி, ஒவ்வொரு நதிக்கு அருகிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கவேண்டும். நதிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலை,குடியிருப்புகளை அகற்றுவது என படிப்படியாக வேலை செய்யவேண்டும் என்று தெரிவித்திருந்தேன். முக்கியமாக பல இடங்களில் வன அழிப்பு மற்றும் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. கடுமையான நடவடிக்கையை தாமதித்தால் பாதிப்பை எதிர்கொள்ளத்தான் வேண்டும்,''
ராஜேந்திர சிங் |
கேரளாவில் உள்ளது போல 44 நதிகள், ஏன் அதில் பாதியளவு நதிகள் ராஜஸ்தானில் இருந்தால், இந்தியாவிலேயே அதிக வளம் கொழிக்கும் மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் ராஜஸ்தான் இருக்கும் என்கிறார் அவர்.
''வளம் கொழிக்கும் நதிகளை தற்போது மீளமுடியாத வெள்ளபாதிப்பு ஏற்படுத்தும் நதியாக நாம் மாற்றிவிட்டோம். இந்த நிலை தொடர்ந்தால் கேரளாவில் வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். நதி அதன் வழியில் பாய்வதை நாம் தடுக்கமுடியாது,'' என்று கூறுகிறார் ராஜேந்திர சிங்.
ராமேன் மக்சேசே விருதும், தண்ணீருக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ள ஆளுமையான தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங், கேராளவில் உள்ள நதிகளை மீட்பது குறித்தும் கேரள மாநிலத்தின் நதிநீர் வளத்தை பயனுள்ள வகையில் சேமிப்பது குறித்தும் ஒரு திட்டத்தை வகுக்க 2015ல் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் தமிழகம் வந்திருந்தபோது அவர் ஆற்றிய உரையின் இணைப்பு: https://www.youtube.com/watch?v=cEs7Qej0HGg
https://www.youtube.com/watch?v=bUK0aSzUkNY )
''''''''''''''''''''''''''''''''''''''''''
''தற்போது வரலாறு காணாத வெள்ளத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில், திட்டங்கள் பற்றி பேசுவது சரியானது அல்ல. உண்மைதான்..! ராஜேந்திர சிங் வந்தார். வரைவு மசோதாவுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் நாம் கொண்டுவரும் எல்லா யோசனைகளையும் களத்தில் செயல்படுத்துவது முடியாத காரியம் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.கேராளவைப் பொருத்தவரை இங்கு நிலப்பரப்பளவு குறைவு. இங்குள்ள மக்கள் காலங்கலாமாக நதிகரையோரங்களில், வாழ்ந்து வருகிறார்கள். பல இடங்களில் வீடுகளுக்கு மிக அருகில் நதி பாய்ந்தோடும் நிலையும் உள்ளது. மக்களை அகற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை. அரசியல் கட்சிகள் அணித்திரண்டு நிற்கும் சூழல் ஏற்படும். பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மக்களை உடனடியாக அவர்களின் பூர்வீக குடியிருப்புகளிலிருந்து அகற்றுவது முறையான செயலாகவும் இருக்காது. அதுபோலவே, நதிகள் பாய்ந்தோடும் பல பகுதிகளையொட்டி வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம் இது.
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், துரதிஷ்டவசமாக, தற்போது நிழ்ந்தது பேரிடர். அதாவது 1924-ல், நிகழ்ந்த பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த அளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும், ஒரு 50 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் பேரிடர்களை எதிர்கொள்வது என்பது தவிர்க்க இயலாதது. நதிகளை பாதுகாக்க வேண்டும், மீட்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். வெள்ளம் வடிந்து, மாநிலம் சகஜநிலைக்குத் திரும்பியதும், இது குறித்து நிச்சயம் பரிசீலிப்போம்” - என்கிறார் கேரள நீர் மேலாண்மை சிறப்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஜேம்ஸ் வில்சன்.
0 comments:
Post a Comment